காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!

சென்னை: பிரபல சீரியல் நடிகையான நக்ஷத்ரா தனது காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தந்தி டிவி, சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் நடிகை நக்ஷத்ரா. தொடர்ந்து குஷ்புவின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தார்.

தொடர்ந்து நாயகி சீரியலில் நடித்தார். ரோஜா, மின்னலே, திருமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் கேமியே அப்பியரன்ஸ் கொடுத்தார் நக்ஷத்ரா.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் நக்ஷத்ரா நாகேஷ். சேட்டை வாயையை மூடி பேசவும், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து வஞ்சகன் மற்றும் துல்கர் சல்மானுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

காதலருடன் நிச்சயதார்த்தம்

காதலருடன் நிச்சயதார்த்தம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தான் என் அன்புக்குரியவர் என காதலரின் மடியில் அமர்ந்திருக்கும் மற்றும் பல ரொமான்டிக் போட்டோக்களை ஷேர் செய்தார். தற்போது காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்துள்ளார் நடிகை நக்ஷத்ரா.

மாலையும் கழுத்துமாக

மாலையும் கழுத்துமாக

காதலர் ராகாவுடன் மாலையும் கழுத்துமாக மணப் பெண் கோலத்தில் நடிகை நக்ஷத்ரா சிரித்தப்படி இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் இருவரும் தங்களின் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டும் போட்டோ மற்றும் கைகளால் ஹார்ட்டினை காட்டும் போட்டோ போன்றவற்றையும் ஷேர் செய்துள்ளார்.

எப்போது திருமணம்

எப்போது திருமணம்

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இருவரும் இணைந்து போட்டோ ஷுட்டும் நடத்தியுள்ளனர். இருவரின் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X