இவர்தான் என் அன்புக்குரியவர்.. காதலரின் மடியில் அமர்ந்து அறிமுகம் செய்து வைத்த பிரபல நடிகை!

சென்னை: பிரபல சின்னத்திரை மற்றும் பெரியத்திரை நடிகையான நக்ஷத்ரா தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர் நக்ஷத்ரா.பின்னர் சீரியர்களில் நடிக்க தொடங்கினார்.

குஷ்புவுடன் இணைந்து லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் லீடிங் ரோலில் நடித்தார் நக்ஷத்ரா.

சின்னத்திரை டூ பெரியத்திரை

சின்னத்திரை டூ பெரியத்திரை


இடையில் பட வாய்ப்புகள் கிடைக்கவே சின்னத்திரையில் இருந்து பெரியத் திரைக்கு ஷிஃப்ட்டானார். வாயை மூடி பேசவும்' இரும்புக்குதிரை, இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

14 லட்சம் ஃபாலோயர்ஸ்

14 லட்சம் ஃபாலோயர்ஸ்

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நக்ஷத்ரா அவ்வப்போது, தனது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இதனால் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது.

காதலரின் மடியில்..

காதலரின் மடியில்..

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பெஷல் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். தனது காதலரின் மடியில் அமர்ந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

டீன்ஏஜில் இருந்தேன்

டீன்ஏஜில் இருந்தேன்

மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது, இன்ஸ்டாகிராமில் நாம் அறிமுகமானபோது டீன் ஏஜில் இருந்தேன். அதன் பிறகு என்னுடைய ஃபாலோயர்கள் எல்லாம் எனக்கு ஒரு புதிய உலகத்தை கற்றுக் கொடுத்தனர். எனது தொழிலில் நான் மிகுந்த சிரத்தையுடன் இருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் என்னை ரசிகர்கள் வளர்த்து வருகிறார்கள்.

என் அன்புக்குரியவர்..

என் அன்புக்குரியவர்..

ரசிகர்கள்தான் என்னுடைய பலம். அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். நீங்கள் அனைவரும் என் வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத பகுதியாக மாறி விட்டீர்கள். இந்த நிலையில் எனது சிறிய உலகத்தில் என்னுடைய அன்புக்குரியவரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

காதலர் ராகாவுடன்

காதலர் ராகாவுடன்

இவர்தான் அந்த அன்புக்குரியவர் என்று ஒரு தனது காதலர் ராகாவுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
காதலரை கட்டியணைத்தப்படியும், அவரது மடியில் அமர்ந்தப் படியும் பல போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் ராகா. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நக்ஷத்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X