Nakshatra Nagesh: உடை மாற்றும்போது நகராத 5 பேர்.. நக்ஷத்ரா நாகேஷ் வெளியிட்ட கசப்பான அனுபவம்!

சென்னை: ஆங்கராகவும் சீரியல் நடிகையாகவும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.

படங்களிலும் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள நக்ஷத்ரா, தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து வருகிறார்.

தன்னுடைய பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் நக்ஷத்ரா, சினிமாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் அதிகமாக பங்கேற்று வருகிறார்.

Actress Nakshatra nagesh shared bad experience in Shooting spot

சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நக்ஷத்ரா நாகேஷ்: நடிகை நக்ஷத்ரா நாகேஷ், ஆங்கர், நடிகை, சீரியல் நடிகை, யூடியூபர் என பன்முகத் திறமைகளுடன் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர். ஆங்கராக அறிமுகமான நக்ஷத்ரா, சினிமாவிலும் நடித்துள்ளார். ஆர்யாவின் சேட்டை மூலம் சினிமாவில் அறிமுகமான நக்ஷத்ரா தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பில்லாததால் தற்போது விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் தொடரில் சரஸ்வதியாக நடித்து வருகிறார். இந்தத் தொடர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனியாக யூடியூப் சேனல் நடத்திவரும் நக்ஷத்ரா, தன்னுடைய கணவருடன் தான் இருக்கும்படியான வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இவர்களின் வெளிநாட்டு சுற்றுலா வீடியோக்களும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் தனியாக பெரிய படங்களின் இசை நிகழ்ச்சிகளிலும் நக்ஷத்ராவை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் படம் ஒன்றில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தற்போது நக்ஷத்ரா பகிர்ந்துள்ளார். படம் ஒன்றில் தான் நடித்துக் கொண்டிருந்தபோது, தன்னை கேரவனில் சென்று உடை மாற்ற தயாரிப்புத்தரப்பு கூறியதாகவும் அந்த வேனில், ஜன்னல்கள் இல்லாமல் வெறும் கண்ணாடிகள் மட்டுமே இருந்ததாகவும் வேனில் வெளியில் 5 பேர் உட்கார்ந்திருந்ததாகவும் கூறியுள்ளார். தான் உடை மாற்றப் போவது குறித்து தெரிந்தும் அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகராமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Actress Nakshatra nagesh shared bad experience in Shooting spot

தான் உடை மாற்றப் போவதை பார்ப்பதற்காகவே அவர்கள் அங்கே இருந்ததை போல தனக்கு தோன்றியதாகவும் நக்ஷத்ரா கூறியுள்ளார். இதையடுத்து வேறு வழியின்றி, தான் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று அவர்களிடம் கேட்டு உடை மாற்றிக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பிரபலமான ஆங்கர், சின்னத்திரை நடிகை என பன்முகம் கொண்ட நக்ஷத்ராவின் இந்த கசப்பான அனுபவம் தற்போது ரசிகர்களின் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொடர்ந்து சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை நடிகைகள் சந்தித்து வருவதாக அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள், படக்குழுவினர் என பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை சந்தித்ததன் அனுபவங்களை பல நடிகைகள் தங்களது பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள நக்ஷத்ராவும் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கசப்பான அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X