அவங்க மட்டும் இல்லனா.. குழந்தைகளுடன் செத்து போய் இருப்பேன்.. மனதை உலுக்கிய நளினியின் பேட்டி!

சென்னை: கணவரை பிரிந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் ஒரு கட்டத்தில் குழந்தைகளுடன் செத்து போய்விடலாம் என்று நினைத்தேன் என நடிகை நளினி பேட்டி ஒன்றில் தனது மன வேதனையை பகிர்ந்துள்ளார்.

நடிகை நளினி இன்றைய தலைமுறையினருக்கு ஒரு சீரியல் சீனியராக இருக்கலாம். ஆனால், 80களின் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தவர் நளினி. 80ஸ் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர். ராமராஜன், சத்யராஜ், முரளி, விஜயகாந்த், மோகன், பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ராமராஜனுடன் படத்தில் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டு பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

actress nalini ramarajan emotional interview about personal life

இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என இரண்டு குழந்தைகள் இருக்கும் போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து இருவரும் பரஸ்பர புரிதலோடு பிரிந்து தனித்தனியாக வாழ்ந்துவந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோராகவே இருந்தனர். மகன் அருண் மற்றும் அருணா திருமணத்தில் ராமராஜன் கலந்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய நளினி, ராமராஜனை விவாகரத்து செய்து பின் சினிமா மற்றும் சீரியல்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்: இந்நிலையில், நடிகை நளினி தனது காதல் கதை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம் என் விவாகரத்து தான், என்னை சுற்றி எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு என் கணவருடன் 14 வருடம் வாழ்ந்தேன். ஆனால், நானும் அவரும் பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்த பிறகு எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மார்ச் 8ந் தேதி மகளிர் தினத்தன்று எனக்கு விவாகரத்து கிடைத்தது. அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரவேக்கூடாது.

அவர் இல்லாமல் வாழ முடியல: நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருத்தர் கூடத்தான் வாழ வேண்டும் என்ற முடிவில் இருந்தேன் அந்த முடிவில் இருந்து நான், என்னைக்குமே மாறியது இல்லை. இவர் இல்லாமல் ஒன்னொருவருடன் நான் வாழ வேண்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் இல்லாத வாழ்க்கையில் நாம வாழ்ந்து என்ன என்று தற்கொலை முடிவிற்கு வந்தேன். ஆனால், இன்னைக்கு அவர் முன்னாடி நான் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்றால் அது உங்களால் தான்.

குழந்தைகளோடு சாக நினைத்தேன்: அவரை விட்டு பிரியும் போது என்னால் தனியாக வாழ முடியும் என்று நினைக்கூட பார்க்கவில்லை, செத்து போய்விடலாம் என்று நினைத்தேன். நாம செத்துட்டா குழந்தைகள் என்ன ஆவாங்க என்று நினைத்து என் குழந்தைகளுடன் சேர்ந்து செத்து போய்டலாம்னு நினைத்தேன். அந்த நேரத்தில் தான் குட்டி பத்மினி கிருஷ்ணதாசி சீரியலில் நீ நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது கூட எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால், அவர்கள் என்னை மோல்டு பண்ணாங்க.

வாழ்க்கையை மாற்றிய சீரியல்: ஆனால், கிருஷ்ணதாசி சீரியலில் நான் நடித்த மனோன்மணி கதாபாத்திரம் தான் என் வாழ்க்கையையும் என்னையும் மாற்றியது. இன்னைக்கு ஒரு தைரியமான பெண்ணாக நான் இருப்பதற்கு காரணம் அந்த சீரியல் தான். இதனால் பெரிய திரையைவிட சின்னத்திரையை மிகவும் நேசிக்கிறேன் என்று நடிகை நளினி அந்த பேட்டியில் கூறியுள்ளார். நளினியின் இந்த பேட்டி வாழ்க்கையில் கணவனை இழந்து, அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X