Nalini: என் உயிரை காப்பாத்துனதே அவங்கதான்.. மனம் உருகி பேசிய ராமராஜன் மனைவி.. புல்லரிக்குதே!
சென்னை: 80 கால கட்டத்தில் கொடி கட்டிப்பறந்த நடிகை நளினி, ரஜினிகாந்த் நடித்த "ராணுவ வீரன்" படத்தில் ரஜினியின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து, உயிருள்ள வரை உஷா, நூறாவது நாள்24, மணி நேரம், அலை ஓசை என பல வெற்றிப்படத்தில் நடித்துள்ளார். தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்ட நளினி, ஓம் சக்தி, சமயபுரத்தாலே சாட்சி போன்ற படத்தில் அம்மன் வேடத்திலும் நடித்திருக்கிறார். தற்போது இவர், ஆன்மீகம் என்பது ஒரு ஒழுக்கம், என்னை உயிரை காப்பாற்றியதே அம்மன் என பேசி உள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்று ஆன்மீக சங்கமம் 2025 என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. இதில், கலந்து கொண்டு பேசிய நடிகை நளினி, என்னை பொறுத்தவரை ஆன்மீகம் என்பது ஒரு ஒழுக்கம். சிறுவயதிலேயே வீட்டில் இருக்கும் பெரியவர்கள், வீட்டிற்கு வந்ததும முகம், கால் கழுவி விட்டு, தீர்த்தம் குடி, கோவிலுக்கு போய்விட்டு வா, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள் என்று சொல்வார்கள். அங்கிருந்தே நமக்கு ஆன்மீகப் பயணம் தொடங்கிவிட்டது. நான் சிறுவயதிலிருந்தே அதே போல தான் இருந்தேன். ஆனால், இடையில் என்னுடைய ஆன்மீக பயணத்திலிருந்து நான் சிறிது விலகி விட்டேன். மீண்டும் ஆன்மீகத்தில் இணைந்து இருக்கிறேன்.

கடவுள் என்னை வழி நடத்துகிறார்: இப்பொழுது நான் மிகவும் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறேன். அதற்கு காரணம் கடவுள் என்னை ஒவ்வொரு விஷயத்திலும் என்னை வழி நடத்திய கொண்டு செல்கிறாள். அதற்கான சாட்சி தான் 2025 ஆம் ஆண்டு ஆன்மீக சங்கமத்தில் இப்போது தான் பேசிக்கொண்டு இருப்பது தான். என்னை பொறுத்த வரையில் ஜோதிடமும் உண்மை, ஆன்மீகமும் உண்மை.இந்த இரண்டையுமே என் வாழ்க்கையில் நான் கடந்து வந்து இருக்கிறேன்.
அம்மன் கொடுத்த உயிர்: என்னுடைய 12வது வயதில் என் உடம்பு முழுக்க புண்ணாக சிரங்காக இருக்கும். அப்போது பலரும் இந்தப் பெண் தங்காது அவ்வளவுதான் என்று சொன்னார்கள். அப்போது என் அம்மா சிவாச்சாரியார் ஒருவரிடம் அழைத்து சென்றார். அந்த சிவாச்சாரியார் என்னை, பார்த்துவிட்டு, இன்று இந்த பெண்ணை யாரெல்லாம் ஒதுக்குகிறார்களோ அவர்களெல்லாம் நாளைக்கு இந்த பெண்ணை கொண்டாடக் கூடிய அளவிற்கு, இந்த குடும்பத்தையே தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த பெண் உங்களை வாழ வைப்பார் என்று சொன்னார்.
கருமாரி அம்மன் துணை: சிவாச்சாரியார் சொன்னதை யாரும் நம்பவில்லை, என் அம்மா மாரி அம்மனிடம் மண்டியிட்டு, வேப்பிலையில் போட்டு கதறி அழுவார்கள். அப்போது, அம்மன் தான் எனக்கு உயிர் கொடுத்து காப்பாற்றினார். என் 13 வயதிற்கு பிறகு என் நிலைமை மாறியது. 14 வயதில் நான் நடிக்க ஆரம்பித்தேன். இன்று வரையிலும் என்னுடன் என் கருமாரி துணை இருக்கிறாள். நான் எப்போது அழைத்தாலும் அந்த நொடியே கருமாரி அம்மன் என் முன் தோன்றுவாள். இது நல்லது, இது கெட்டது, இதை செய், இதை செய்யாதே என்று என்னை என் அம்மன் உடனிருந்து வழிகாட்டி கொண்டே இருக்கிறாள். அதற்கு காரணம் ஆன்மீகத்தின் மீதும், ஜோதிடத்தின் மீதும் எனக்கு இருக்கும் நம்பிக்கை என்று நடிகை நளினி அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











