Nalini: ஆதரவு இன்றி தவித்த நடிகை.. ஜெயலலிதா சொல்லியும் கேட்கல.. தனியாக போராடிய நளினி!
சென்னை: கணவர் ராமராஜனை பிரிந்த பின் தனி ஆளாக போராடி குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்து இருக்கிறார் நடிகை நளினி.
80 மற்றும் 90 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நளினி, மனசுக்கேத்த மகராசா, காவலன் ஆகிய படங்களில் ராமராஜன் ஜோடியாக நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக பல ஆண்டுகள் வாழ்ந்த இவர்களுக்கு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.

நளினி ராமராஜன்: திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த நளினி, விவாகரத்தான பின் தொலைக்காட்சிகள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.பல தொலைக்காட்கிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்த அவர், ராமராஜன் ஒரு நல்ல நடிகர். பாவம், தெரியாமல் என்னை காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனால் ஏனோ எங்கள் இருவர் இடையே செட்டாகவில்லை. விவாகரத்து ஆனாலும் ராமராஜனை இன்னும் நான் காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
உதவ முன்வந்த ஜெயலலிதா: என்னத்தான் நளினி சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் இருந்தாலும், ராமராஜனை விவாகரத்து செய்த பின் இரண்டு குழந்தைகளையும் வளர்க்க படாத பாடுபட்டுள்ளார். இந்த நேரத்தில் தான் ராமராஜன் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஜெயலலிதாவிற்கு ராமராஜன் மீது அன்பு உண்டு என்பதால், நளினி இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டதை கேள்விப்பட்ட ஜெயலலிதா பள்ளி செலவுகளை நான் பார்த்து கொள்கிறேன் என்றாராம். ஆனால், நளினி இல்லை அம்மா, அவர்கள் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்று கூறியுள்ளார்.
தைரியமான பெண்: பெரிய ஸ்கூலில் படித்துக்கொண்டு இருந்த இரண்டு குழந்தைகளையும், கோபிலா மடத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். யாருடைய ஆதரவும் இல்லாமல் தனது சொந்த காலில் கஷ்டப்பட்டு வளர்ந்துள்ளார். தற்போது நளினியின் மகள் மற்றும் மகன் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் நளினியின் துணிச்சலான தைரியம் தான்.


Click it and Unblock the Notifications











