கன்னாபின்னாவென எடையை குறைத்த நம்மு.. வெளியான சீக்ரெட்.. தீயாய் பரவும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோ!

சென்னை: நடிகை நமீதா தான் கன்னாபின்னாவென எடையை குறைத்துள்ள போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

தெலுங்கு நடிகையான நமீதா தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஏய், இங்கிலிஷ்காரன், பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார்.

சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் பொட்டு படம் வெளியானது. இதில் பெண் சாமியாராக மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார் நமீதா.

ஓவியாவை பழித்து

ஓவியாவை பழித்து

தற்போது பவ் பவ் என்ற படத்திலும் நடித்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் முதல் முறையாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான ஓவியாவின் குடும்பத்தை கேன்சர் குடும்பம் என்று பழித்து பேசி சர்ச்சைக்குள்ளானார்.

பட வாய்ப்புகள் இல்லை

பட வாய்ப்புகள் இல்லை

இதனை தொடர்ந்து, தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திராவை திருப்பதியில் திருமணம் செய்துக்கொண்டார் நமீதா. அதன் பிறகு உடல் எடை கூடி ரொம்பவே குண்டாக காணப்பட்டார் நமீதா. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

உடல் எடையை குறைத்து

உடல் எடையை குறைத்து

உடல் எடையை குறைக்க தீயாய் வேலை செய்தார் நமீதா. ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நடிகை நமீதா தான் உடல் எடையை குறைத்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

சிக்கென இருக்கும் போட்டோ

சிக்கென இருக்கும் போட்டோ

இதில் கன்னமெல்லாம் செம சப்பியாக குண்டாக இருக்கும் தனது போட்டோவையும் உடல் எடையை குறைத்து சிக்கென இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த போட்டோவுக்கு முன்னாள் பின்னாள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அதிக மன அழுத்தம்

அதிக மன அழுத்தம்

அதில் நான் கருப்பு டிரெஸ் அணிந்திருக்கும் போட்டோ 9 அல்லது 10 வருடங்களுக்கு முன்பு எடுத்தது. அதன் அருகில் இருக்கும் போட்டோ சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்தது. எந்த ஃபில்டரும் இல்லை. டிப்ரஷன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் நான் இதை போஸ்ட் செய்துள்ளேன்.

தூங்க முடியவில்லை

தூங்க முடியவில்லை

என்னுடைய பழைய போட்டோவில் நான் அதிக மன அழுத்தத்தில் இருந்தேன். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அதை நான் அறிந்திருக்க வில்லை. நான் சங்கடமாக உணர்ந்தேன், சமூகத்திற்கு ஏற்றவர் இல்லை என்று நினைத்தேன். இரவுகளில் என்னால் தூங்க முடியவில்லை, நான் அதிகம் சாப்பிட ஆரம்பித்தேன்.

97 கிலோ எடையில்..

97 கிலோ எடையில்..

நான் தினமும் பீஸ்ஸாவை ஆர்டர் செய்ய ஆரம்பித்தேன்.
திடீரென்று நான வீங்கிவிட்டேன் என் ஷேப்பும் மாறிவிட்டது. நான் 97 கிலோவில் இருந்தேன் !! நான் மதுவுக்கு அடிபணிந்திருக்கலாம் என்று மக்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர். நான் பி.சி.ஓ.டி மற்றும் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று மட்டுமே எனக்குத் தெரியும்!!

டாக்டரிடம் போகவில்லை

டாக்டரிடம் போகவில்லை

அதன் பிறகு 5 ஆண்டுகள் டிப்ரஷனுக்கு பிறுகு என் கிருஷ்ணாவை இறுதியாக பார்த்தேன். நான் மகா மந்த்ரா மெடிட்டேஷனை மேற்கொண்டேன். நான் எந்த மருத்துவரிடமும் செல்லவில்லை எந்த தெரபியும் மேற்கொள்ளவில்லை.

உங்களுக்குள்ளேயே இருக்கு

உங்களுக்குள்ளேயே இருக்கு

என்னுடைய தெரப்பி மெடிட்டேஷன்தான். கிருஷ்ணாவை தான் வணங்கினேன். இந்த போஸ்ட்டின் மைய்யக்கருத்து என்னவென்றால், நீங்கள் வெளியில் தேடுவது உங்களுக்குள்ளேயே இருக்கும் என்பதுதான்.. இவ்வாறு நமீதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: நமீதா namitha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X