கேஎஸ் ரவிக்குமார் படத்தில் வில்லியாக நடிக்கும் மச்சான்ஸ் நடிகை!

சென்னை: கேஎஸ் ரவிக்குமார் படத்தில் நடிகை நமீதா வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சேரன், பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, படையப்பா, முத்து, தசாவதாரம், வில்லன், லிங்கா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

Actress Namitha acting in KS Ravikumar Movie

அடுத்ததாக இவர் தெலுங்கில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சோனல் சவுகான் என்ற நடிகை என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நமீதாவும் தற்போது நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார் நமீதா. இந்நிலையில் என்டிஆர் பாலகிருஷ்ணாவுக்கு வில்லியாக கேஎஸ் ரவிக்குமார் படத்தில் கமிட்டாகி உள்ளார் நமீதா. நமீதா ஏற்கனவே 'சிம்ஹா' என்ற படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வில்லி அவதாரம் எடுத்திருக்கிறார் நமீதா. தனது கவர்ச்சியாலும் மச்சான்ஸ் என்று அழைத்தும் இளைஞர்களிடம் பெரும் மதிப்பை பெற்ற நமீதா, தமிழில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X