கணவருடன் திருப்பதியில் சாமி கும்பிட்ட நமீதா… ஏற்பாடுகள் சரியில்லை என்று குற்றச்சாட்டு !
சென்னை : நடிகை நமீதா கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தார்.
விஜபி தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அத்துடன் கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழில் அறிமுகம்
நடிகை நமீதா விஜய்காந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அடுத்து, மகா நடிகன், இங்கிலீஸ்காரன், அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

திருமணம் செய்து கொண்டார்
கவர்ச்சிப்புயலாக பலத்திரைப்படத்தில் நடித்த நமீதா, 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பட வாய்ப்புகள் இல்லாததால் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
Recommended Video

கணவருடன் தரிசனம்
இந்நிலையில், நடிகை நமீதா கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தார். ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. பின்னர் கோயில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் இவர்கள் இருக்கும் தீர்த்த பிரசாதம் மற்றும் லட்டும் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகள் சரியில்லை
தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த நமீதா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த முறை வந்தபோது சுவாமி தரிசன ஏற்பாடு சிறப்பாக இருந்தது. ஆனால், தற்போது ஏற்பாடுகள் எதுவும் சரியில்லை. ஊழியர்கள் அனைவரும் ஒருவித டென்ஷனாக இருந்தார்கள் என்று கூறியுள்ளார். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்னும் தரிசனம் இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











