முதன்முறையாக கர்ப்பமானேன்.. ஆனால், 4 மாதத்தில் கலைந்துவிட்டது.. கண்கலங்கிய நடிகை நமீதா!

சென்னை: எனக்கு திருமணமாகி முதன்முறையாக 2021ம் ஆண்டு கர்ப்பம் ஆனேன். ஆனால், நான்கு மாதத்திலேயே கர்ப்பம் கலைந்துவிட்டது. இதனால், மன உளைச்சலில் இருந்தேன். அதன்பின் தான் மீண்டும் கர்ப்பமாகி இரட்டை குழந்தைகள் பிறந்தது என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் பிரபலமானார். இந்த திரைப்படத்தை அடுத்து, மகா நடிகன், இங்கிலீஸ்காரன், அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

Namitha interview

நடிகை நமீதா: தமிழே அழகான மொழி, அதுவும் நமீதா வாயில் இருந்து கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழை கேட்கவே தனி இளசுகள் கூட்டம் நமீதா பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தது. அழகிய தமிழ் மகன், பில்லா, நான் அவன் இல்லை படங்களில் சிக்குனு இருந்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார்.

மன அழுத்தம் தான் காரணம்: மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா பல பேட்டியில் கூறியிருந்தார். உடல் எடை அதிகரித்த நமீதாவிற்கு அதன் பிறகு படவாய்ப்பு குறைந்து போனது. இதையடுத்து, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். அதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரால் தாக்கு பிடிக்க முடியாததால், 28 நாட்களிலேயே எலிமினேட்டாகி வெளியேறினார்.

இரட்டை குழந்தை: 2017 ஆம் ஆண்டு நடிகை நமீதா வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. தனது மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர் வைத்துள்ளார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நமீதா கற்ப கால கஷ்டங்கள் குறித்து பேசி உள்ளார்.

கர்ப்பம் கலைந்தது: இதில், நான் பெற்றோருடன் சூரத்தில் இருந்த போது தான் பிரெக்னன்சி டெஸ்ட் எடுத்தேன். அதன் பின் அப்பாவிடம் நீங்க தாத்தா ஆகிட்டீங்க என்றேன். அதன்பின் கணவரிடம் சொன்னேன் இரு நாட்களில் சூரத் வந்துவிட்டார். ஆனால், 4 மாதத்திலேயே கர்ப்பம் கலைந்துவிட்டது. 2 மாதம் எனக்கு ஏதுமே தெரியவில்லை, அதனால் நான் மன உளைச்சலில் இருந்தேன்.

நடக்கக்கூடாது: அதன்பின் தான் மீண்டும் கர்ப்பம் ஆனேன், மூன்று மாதத்திலேயே இரட்டை குழந்தை என்பது தெரிந்துவிட்டதால், முழு நேரமும் படுக்கையில் இருந்தேன், நடக்கக்கூடாது என்றனர், மாடிக்கு ஒருமுறையும் கீழே ஒருமுறை போகணும் என்றும் பெட்டில் தான் இருக்கணும் என்றும் கணவர் கண்டிஷன் போட்டார். அந்த சமயத்தில் 7 மாதமாகியும் வயிறு வெளியில் தெரியவில்லை. அதுவே எனக்கு பயமாக இருந்தது. அதன்பின் தான் திடீரென வயிறு வெளியில் தெரிந்தது என்று நமீதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: namitha interview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X