முஸ்லீமா.. இந்துவா..மோசமா பேசினாங்க.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடந்தது என்ன? நமிதா விளக்கம்!
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நடிகை நமிதாவிடம் என்ன மதம் என்று கேட்டு காயப்படுத்தியதாக வீடியோவில் புகார் கூறியிருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் இது வழக்கமான நடைமுறை தான் என்று விளக்கம் கொடுத்த நிலையில், கோவிலில் என்ன நடந்தது என்பது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமாக கூறியுள்ளார் நடிகை நமிதா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை நமிதா, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கிருஷ்ண ஜெயந்திக்காக நான் அனைத்து கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறேன். அது போல இன்று நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்த அதிகாரி ஒருவர் என்னிடம் நீங்கள் இந்துவா, என்ன சாதி என்று கேட்டார். அதற்கான சான்றிதழ் இருக்கா என்று கேட்டு என்னையும் என் கணவரையும் சங்கடத்தில் ஆழ்த்தினார்.

நமிதா வேதனை: நான் ஒரு இந்து என்பது, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும், என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ், என கிருஷ்ணனின் பெயர் தான் வைத்துள்ளேன். கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது. நான் பல கோவில்களுக்கு சென்று இருக்கிறேன், இந்தியாவில் எந்த கோவிலிலும் இது போன்று கேள்வி கேட்டது இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டது வேதனையாக உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என்று சேகர் பாபுவிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.
கோவில் நிர்வாகம் விளக்கம்: நமிதாவின் வீடியோ இணையத்தில் டிரெண்டானதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம், கோயில் உள்ள தெப்பக்குளத்தை தாண்டி செல்வதற்கு இந்துக்கள் அல்லாத நபர்களுக்கு அனுமதி இல்லை. அதனால், முக்கியமான பிரபலங்கள் அல்லாத வெளிநாட்டைச் சேர்ந்த நபர்கள் கோயிலுக்கு வரும் போது அவர்களிடம் இந்துவா என்று விசாரிப்பது வழக்கமான நடைமுறை. அதனால் தான் நமிதாவிடம் இந்துவா என்று கேட்டோம். பின் அவரின் கணவருக்கு விஐபி தரிசனம் வழங்கினோம் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.
நடந்தது இதுதான்: இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நமிதா மற்றும் அவரது கணவர், நாங்கள் கோவிலுக்கு வருவதாக இரண்டு தினங்களுக்கு முன்பே சொல்லி விட்டோம். வழியில் எங்களை தடுத்து நிறுத்தினார்கள். எங்களுடன் வந்தவர்கள் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இதைத்தொடர்ந்து, நான் என்ன என்று கேட்ட போது, நீங்கள் இஸ்லாமியர் என்று எங்களுக்கு புகார் வந்து இருப்பதாக கூறினார்கள். அதன் பின் இந்து என்பதற்கான மதச்சான்று கேட்டுள்ளனர்.
மேலும், செல்போன் இல்லாத நிலையில் ஆதார் அட்டையை காண்பித்த பிறகும், 15 நிமிடமாக காத்திருக்க வைத்து பின் கோயிலுக்குள் அனுமதித்தனர். இது அவர்களின் வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், ஒருவரை மோசமான முறையில் நடத்தக்கூடாது. இதுபோன்று இனி யாருக்கும் நடக்காத வகையில் சரியான கோயில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதனை அரசியலாக்க வேண்டாம் என்று நமிதாவும் அவரின் கணவரும் அந்த பேட்டியில் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











