நடிகை நமீதாவுக்கு ரொமான்ஸ் போரடிச்சிடுச்சாமே ஏன்? ஆடியோ விழாவில் இப்படி சொல்லிட்டாரே?

By

சென்னை: நடிகை நமீதா ரொமான்ஸ் போரடித்துவிட்டது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா- எம்.தீபா தயாரித்துள்ள படம் காக்டெய்ல்.

இதை அறிமுக இயக்குநர் ரா.விஜயமுருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, ரமேஷ், மிதுன், மற்றும் பாலா, குரேஷி நடித்துள்ளனர்.

காக்டெய்ல் பறவை

காக்டெய்ல் பறவை

மற்றும் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காக்டெய்ல் என்கிற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீடு

இசை வெளியீடு

சாய் பாஸ்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராமாபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் நடந்தது. இதில் எஸ்.வி.சேகர், நமீதா, நடிகர் அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ், கருணாகரன், மைம் கோபி உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தப் படம் மார்ச் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

ரொமான்டிக் படங்கள்

ரொமான்டிக் படங்கள்

விழாவில் நடிகை நமீதா பேசும்போது, 'எனக்கு வழக்கமான ரொமான்டிக் படங்களை பார்த்து பார்த்து போரடித்து விட்டது. இதுபோன்ற காமெடி படங்கள்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இப்போது அதுபோன்ற படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த காக்டெய்ல் படத்தை நான் தியேட்டருக்கு போய் பார்ப்பேன் என்றார்.

நல்ல நாள் தான்

நல்ல நாள் தான்

நடிகர் எஸ்வி சேகர் பேசும்போது, சிவராத்திரி தினமாக பார்த்து காக்டெய்ல் ரிலீஸ் செய்கிறார்கள். நமக்கு நல்லது நடக்கிறது என்றால் அந்த நாளும் நல்ல நாள் தான் என்றார்.எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் இசைத்தட்டை வெளியிட, எஸ்ஜிசி சினிமாஸ் கனகராஜ், முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் பெற்றுக் கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X