குப்பையில இருந்ததை என் தலையில் வைக்க சொன்னாரு.. திருமணத்தில் நடிகை நமீதாவுக்கு கணவர் செய்த விஷயம்!

மும்பை: நடிகை நமிதா தமிழ். தெலுங்கு. ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்தவர் அஜித் குமார். சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருபவர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி நமீதா மற்றும் வீர் இருவரும் இணைந்து யூடியூபிற்கு அளித்துள்ள பேட்டி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தன்னுடைய காதல், திருமணம் மற்றும் தங்களுடைய தாம்பத்திய வாழ்க்கை குறித்து இந்த ஜோடி சுவாரஸ்யங்களை இந்த இன்டர்வியூவில் பகிர்ந்துள்ளனர்.

Actress Namitha open up about her life and husband

நடிகை நமீதா: நடிகை நமீதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழில் அஜித், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள நமிதா, ஏராளமான ரசிகர்களை தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் கவர்ச்சியாலும் கட்டிப் போட்டவர். கொழுக் மொழுக் உடல்வாகுடன் இருந்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ள நிலையில் காதலர் தினத்தையொட்டி இவர்கள் இருவரும் இணைந்து youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

வீரை சைட்டடித்த நமீதா: இதில் தான் முதல்முறையாக வீரை பார்த்தபோது நல்ல உயரம் மற்றும் உடல்வாகுடன் காணப்பட்ட அவரை தான் சைட் அடித்ததாகவும் ஆனால் அவர் தன்னை கண்டு கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வீர் அமைதியான நபராக இருந்த நிலையில் தான் அவருக்கு எதிர்மறையான கேரக்டருடன் இருந்ததாகவும் ஆனால் திருமணத்திற்கு பிறகு அவருக்காக தான் தன்னை மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். வீரை சந்தித்த தன்னுடைய அம்மா தனக்கு வைரம் கிடைத்துள்ளதாகவும் அவரை மிஸ் பண்ண வேண்டாம் என்று கூறியதாகவும் நமீதான தனது பேட்டியில் கூறியுள்ளார்.

திருமணத்தில் சண்டை: தனக்கும் வீருக்கும் திருப்பதியில் திருமணம் நடந்ததாகவும் ஆனால் அன்றைய தினம், தாங்கள் இருவரும் சண்டையிட்டு கொண்டதாகவும் நமீதா தெரிவித்துள்ளார். தெலுங்கு முறைப்படி நடந்த திருமணத்தில் மணமக்களின் தலையில் வெற்றிலை மற்றும் சீரகம் ஆகியவற்றை வைப்பார்கள் என்றும் கோயிலை சுற்றி வரும் போது தான் அதை குப்பை என்று நினைத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டதாகவும் இதை பார்த்த தன்னுடைய கணவர், அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று கூறி குப்பை தொட்டியில் இருந்து அதை மீண்டும் எடுத்து தன்னுடைய தலையிலேயே வைத்ததாகவும் நமீதா தெரிவித்துள்ளார்.

நமீதாவின் குணம்: இதனிடையே நமீதா குறித்து பேசிய வீர், அவருக்கு எல்லாமே டிசிப்ளினாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நேரத்திற்கு அனைத்தும் நடக்க வேண்டும் என்று நமிதா எதிர்பார்ப்பார் என்றும் தன்னிடம் மட்டுமில்லாமல் தன்னுடைய குழந்தைகளிடமும் அதை அவர் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். அதை மட்டும் அவர் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து பேசிய நமீதா, திருமணத்திற்கு முன்பே தன்னுடைய வருங்கால கணவர் குறித்து தனக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்ததாகவும் அதற்கேற்பவே தனக்கு வீர் கிடைத்தார் என்ம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X