'ஹாய் மச்சான்ஸ்... என்க்கு கல்யாணம் சப்போர்ட் பண்ணுங்கே!' - நடிகை நமீதா அறிவிப்பு
Recommended Video

சென்னை: நடிகை நமீதாவுக்கும் அவரது நண்பர் வீர் என்பவருக்கும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த அறிவிப்பை பிக்பாஸ் ரைசா வெளியிட்டிருக்கிறார்.
கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்தவர் குஜராத்தைச் சேர்ந்த நடிகை நமீதா. 'எங்கள் அண்ணா', 'ஏய்', 'பில்லா', 'அழகிய தமிழ்மகன்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
கிளாமராக நடித்து ரசிகர்களிடத்திலும், தமிழ் சினிமாவிலும் அவருக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லை.

பிக்பாஸ்
உடல் எடை அதிகரித்ததால் தொடர்ந்து சரியான படவாய்ப்பு இல்லாமல் இருந்துவந்தார் நமீதா. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றவர், ஒருசில வாரங்களிலேயே பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
'பொட்டு' படத்தில்
தற்போது தமிழில் 'பொட்டு' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துவரும் நமீதா வரும் 24-ம் தேதியன்று திருமணம் செய்து கொள்ள உள்ளார். இது பற்றிய அறிவிப்பை 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நமீதாவுடன் கலந்து கொண்ட ரைசா அவருடைய ட்விட்டரில் ஒரு வீடியோ மூலம் இதைத் தெரிவித்துள்ளார்.

நமீதாவின் நண்பர்
அந்த வீடியோவில் நடிகை நமீதாவும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் வீர் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் பேசியிருக்கும் நமீதா, 'நவம்பர் 24 நானும் மணப்பெண்ணாகப் போறேன். எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க... தாங்க்யூ மச்சான்ஸ்' எனக் கூறியுள்ளார்.

சரத்பாபு உடனான வதந்தி
நமீதாக்கும் மூத்த நடிகரான சரத்பாபுவிற்கும் திருமணம் எனும் வதந்தி சில நாட்களுக்கு முன்பு அதிகமாகப் பரவியது. சரத்பாபுவும், நடிகை நமீதாவும் கடந்த சில வருடங்களாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் ஒன்றாக வாழ்வதாகவும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

வதந்திந்திக்கு முற்றுப்புள்ளி
வதந்தி குறித்து நடிகர் சரத்பாபு, 'நான் அவருடன் படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்த வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இது முழுப் பொய்' எனக் கூறியிருந்தார். இந்நிலையில், நமீதாவின் திருமண அறிவிப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











