அம்மாவாகப்போகும் மைனா நந்தினி.. கலக்கலாக நடந்த வளைகாப்பு.. வாழ்த்து சொல்லும் ரசிகாஸ்!
சென்னை: நடிகை மைனா நந்தினியின் வளைகாப்பு போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
Recommended Video
சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா கேரக்டரில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் நந்தினி பெயருக்கு முன்னால் மைனா ஒட்டிக்கொள்ள ரசிகர்கள் அவரை மைனா நந்தினி என்று அழைத்து வருகின்றனர்.

படங்கள்
பல சீரியல்களில் வரிசைக்கட்டி நடித்த மைனா நந்தினிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் நடித்திருந்தார் மைனா நந்தினி.

கணவர் தற்கொலை
ஏற்கனவே ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் நந்தினி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நந்தினியின் கணவர் கார்த்திகேயன் லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணம்
அதன் பிறகு சில ஆண்டுகள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்த நடிகை மைனா நந்தினி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

நேற்று வளைகாப்பு
கடந்த மே மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள மைனா நந்தினிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. வளைகாப்பு முடிந்தவுடன் தனது கணவருடன் இருக்கும் போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
மேலும் குட்டி யோகேஷ் அல்லது குட்டி நந்தினிக்காக காத்திருப்பதாகவும் லவ் யு பாப்பா என்றும் தனது போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை மைனா நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











