LEO லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் அந்த பியூட்டி யாரு.. அலசி ஆராயும் ரசிகர்கள்!
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இருக்கும் மார்டன் அழகியின் போட்டோவைப் பார்த்த ரசிகாஸ் யாரு இந்த பியூட்டி என கேட்டு வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து லோகேஷ் கனகராஜை புகழின் உச்சிக்கு கொன்று சென்றுவிட்டது.
இந்த படத்தின் வெற்றியால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் இவர் பக்கம் திரும்பி உள்ளதால், தளபதியின் லியோ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

தளபதி 67
தளபதி 67 படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மாஸான அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து திணறடித்துவிட்டது படக்குழு. செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோசின் பிரம்மாண்டமாக தயாரிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில், விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றனர்.

லியோ
லியோ தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் லோகேஷ் யுனிவர்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பும், ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு
தளபதியின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால்,காஷ்மீரில் லியோ படத்தின் படிப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் லீக்காகி டிரெண்டானதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தளபதி 67 ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் தளபதி 67 தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகும்.

யாரு இந்த பியூட்டி
இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த மாடல் அழகியான நடிகை நந்தினி நாகராஜ் , லோகேஷ் கனகராஜூடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக சுயம்புவாக உருவான தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் லியோ & தளபதி 67 படத்தின் ஹேஸ்டேக்குகளையும் நந்தினி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாரு இந்த பியூட்டி என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











