சைஸ் என்ன… ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசன்… செருப்படி கொடுத்த நந்திதா ஸ்வேதா !
சென்னை : நடிகை நந்திதா ஸ்வேதா, ஐபிசி 376, இடம் பொருள் ஏவல், வணங்காமுடி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது, வரம்பு மீறிய நெட்டிசன் ஒருவர் ஆபாசமான கேள்வி கேட்டுள்ளார். அதற்கு செருப்படியான பதிலளித்துள்ளார் நந்திதா,

அட்டக்கத்தியில்
பின்னர், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். அடுத்ததே விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

திறமையான நடிகை
இதையடுத்து, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா ஆகிய படங்களிலும், தளபதியின் புலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிது நேரமே அந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது.

கடைசியாக நடித்திருந்தார்
எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா, சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுகிறார். சோஷியல் மீடியாவில் இவருக்கு என்று பெருமளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

செருப்படி பதில்
அண்மையில் சமூக ஊடகத்தில் ரசிர்களுடன் கலந்துரையாடி உள்ளார். அப்போது, வரம்பு மீறிய நெட்டிசன் ஒருவர் உங்கள் மார்பின் அளவு குறித்து கூறுங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் கடுப்பான நந்திதா ஸ்வேதா, இந்த கேள்வியை உங்கள் தாய், மனைவி, சகோதரி, தோழி, நண்பரின் சகோதரி போன்றவர்களிடம் ஏன் கேட்கக்கூடாது, அவர்கள் உங்களுக்கு சரியாக பதிலளிப்பார்கள் என்று செருப்படியான பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











