Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
புது வீடு கட்டி பால் காய்ச்சிய நம்ம குமுதா..யாரெல்லாம் போயிருக்கிறாங்க தெரியுமா?
சென்னை : நடிகை நந்திதா ஸ்வேதா பெங்களுரில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி முடித்துள்ளார்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் அனைவருக்கும் பிடித்த நடிகையாக மாறினார்.
தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை நந்திதா.
ஆரஞ்சு மிட்டாய் கவுனில் தஞ்சாவூர் பொம்மை போல க்யூட்டாக இருக்கும் நந்திதா ஸ்வேதா!
நந்திதா ஸ்வேதா
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். அடுத்ததே விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
பல படங்களில் நடித்துள்ளார்
இதையடுத்து, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, விஷ்ணு விஷாலுடன் முண்டாசுபட்டி, உப்புக்கருவாடு உள்ளிட்ட படங்களிலும், தளபதியின் புலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். புலி படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது.
ஐபிசி 376
வளைந்து நெளிந்து வரும் கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்த நந்திதா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை. இதையடுத்து, எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருந்தார்.
பிரம்மாண்ட வீடு
இந்நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதா பெங்களூரில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றது. இந்த புதுமனை புகுவிழாவில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துள்ளார்.
கிரகப்பிரவேச போட்டோஸ்
சினிமா பின்னணி பாடகர் & கன்னட பிக்பாஸ் பிரபலம் ஶ்ரீ ராமச்சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கிரகப்பிரவேச புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஃபேஷன் டிசைனர் ரேஷ்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!