அழகை வெளிச்சம் போட்டு காட்டிய நந்திதா ஸ்வேதா..வைரல் போட்டோஸ் !
சென்னை : கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா.
தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து முக்கியமான நடிகைகையாக நிகழ்ந்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படத்தை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர், இருட்டு அறையில் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழில் அறிமுகம்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். அடுத்ததே விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமார என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு இன்று குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று அனைவரையும் சொல்லவைத்துள்ளது.

கிராமத்து பெண்ணாக
பார்ப்பதற்கு எதார்த்தமான முகமாக இருந்ததால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நந்திதா. இதையடுத்து எதிர் நீச்சல் மற்றும் முண்டாசுப்பட்டி படத்தில் நடித்திருந்தார். எதிர்நீச்சல் படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனியாக வந்து இயல்பான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் நந்திதா.

காக்கி சட்டையில் மிரட்டினார்
இதையடுத்து தளபதியின் புலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். சிறிது நேரமாக அந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் படியாக இருந்தது. அதன் பின்னர் ஐபிசி 376 படத்தில் காக்கி சட்டை போட்டு போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்தார்.

இருட்டு அறையில்
என்னத்தான் திறமையான நடிகையாக இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் சரி வர அமைய வில்லை. இதனால் மற்ற நடிகைகளைப் போல இவருக்கு கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். இணையத்தில் ஹாட்டான புகைப்படங்களை இவர் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர், இருட்டு அறையில் அமர்ந்து, கொண்ட செம கவர்ச்சியான உடையில் தனது அழகை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











