இனிமே கவர்ச்சிதான்.. முண்டா பனியனுடன் படுகவர்ச்சி காட்டும் நந்திதா!
சென்னை : முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர் நீச்சல் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை நந்திதா இப்பொழுது படுக்கை அறையில் இருக்கும் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐபிசி 376 இந்த திரைப்படத்தில் லீட் ரோலில் போலீஸ் கதாபாத்திரத்தில் முதல்முறையாக நடித்து வரும் நந்திதா கன்னடம் தெலுங்கு தமிழ் என எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் இப்பொழுது வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்று ரசிகர்களை சூடாக்கிய தோடு இயக்குனர்களுக்கு தான் கவர்ச்சி நடிக்க தயாராக உள்ளேன் என சொல்லாமல் சொல்லியுள்ளார்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில்
சினிமாவில் நிலைத்து நிற்க நடிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு கவர்ச்சியும் கட்டாயமான ஒன்றாக உள்ளது என்பது எழுதப்படாத விதி. அவ்வாறு அறிமுகமாகும் கதாநாயகிகள் ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாத குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தும் பின் போகப் போக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருவதும் பலரும் அறிந்ததே.

பா. ரஞ்சித் இயக்கிய
அந்த வகையில் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட நல்ல தமிழ் பேசத் தெரிந்த நடிகையான நந்திதா ஸ்வேதா தமிழில் பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் படுத்தப்பட்டார்.

தொடர்ந்து அதே பாணியில்
பார்க்க மிகவும் லட்சணமாக பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் நந்திதா, அட்டகத்தி திரைப்படத்தில் செம ஹோம்லியான லுக்கில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளையும் பெற்றதோடு தொடர்ந்து அதே பாணியில் அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

முண்டாசுப்பட்டி
அட்டகத்தியின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்த நந்திதா அதே சமயம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

போலீஸ் கதாபாத்திரத்தில்
தமிழில் முண்டாசுப்பட்டி திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு மிகப்பெரிய வெற்றியையும் கொடுக்க முடியாமல் தவித்து வரும் நந்திதா இப்பொழுது ஐபிசி 376 என்ற இந்தப் படத்தில் மிரட்டும் போலீஸ் அதிகாரியாக முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இருமொழிகளில்
ஃபேண்டஸி இயக்குனர் சிம்புதேவனின் அடுத்த படமான " கசடதபற" பல இளம் நடிகர்களுடன் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் நிலையில் இந்த திரைப்படத்திலும் ஒரு முக்கியமான ஹீரோயின் கதாபாத்திரத்தில் நந்திதா நடித்து வருகிறார்.

இப்பொழுது கவர்ச்சியிலும்
இவ்வாறு மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க நந்திதா போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்ட இவர் இப்பொழுது கவர்ச்சியிலும் இறங்கியுள்ளார்.

புதுப்புது புகைப்படங்களை
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நந்திதா அதே போன்று சமூக வலைத்தளங்களிலும் மிக பிஸியாக தனது புதுப்புது புகைப்படங்களை அவ்வப்போது தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

பெட்ரூமில்
அவ்வாறு இப்போது வெளியிட்டுள்ள படுக்கையறை புகைப்படம் ஒன்றில் தம்மாத்தூண்டு முண்டா பனியனுடன் ரசிகர்களை சூடேற்றும் வகையில் பெட்ரூமில் இருந்தவாறு கண்களால் கொத்தி தின்னும் ராட்சசி போல கவர்ச்சி வலை வீசி இருக்கும் இந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியதோடு இயக்குனர்களுக்கு தான் கவர்ச்சியில் நடிக்க தயாராக உள்ளேன் என சொல்லாமல் சொல்லியுள்ளார்.


Click it and Unblock the Notifications











