கொரோனா அறிகுறி.. தனிமைப்படுத்திக்கொண்ட விஜய் சேதுபதி பட நடிகை!

சென்னை: கொரோனா அறிகுறி காரணமாக பிரபல நடிகை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

கன்னட சினிமாவின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானாவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல், விஜய் சேதுபதியுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், புலி, உப்பு கருவாடு என பல படங்களில் நடித்துள்ளார்.

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார் நந்திதா. கடைசியாக இவரது நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியானது. இதில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கேசண்ட்ரா லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.

தனிமைப்படுத்திக்கொண்டு..

தனிமைப்படுத்திக்கொண்டு..

இந்நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதா தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பாய் இருங்கள்

பாதுகாப்பாய் இருங்கள்

மேலும் அனைவரும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மோசமாக உள்ளது. பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டு வரும் நிலையில் நந்திதா கொரோனா அறிகுறியுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இன்டியன் பீனல் கோட்

இன்டியன் பீனல் கோட்

நடிகை நந்திதா தற்போது ஐபிசி 376 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தை ராம்குமார் சுப்பராமன் இயக்கி வருகிறார். ஐபிசி 376 என்பது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கான இந்திய தண்டனைக் குறியீடு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X