பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார்
சென்னை: பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.
ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த நாஞ்சில் நளினி, சிவாஜி கணேசன் நடித்த எங்க ஊர் ராஜா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இந்தப் படம் 1968 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து அண்ணன் ஒரு கோயில், தீர்ப்பு, தங்கப்பதக்கம் உட்பட சில படங்களில் நடித்தார்.

மற்றும் தர்மயுத்தம், ஆடுபுலி ஆட்டம், ரசிகன் ஒரு ரசிகை, அன்னை அபிராமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
சென்னை வேளச்சேரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த நாஞ்சில் நளினி, கடந்த சில தினங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று காலமானார்.
மறைந்த நாஞ்சில் நளினிக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மதியம் நடக்கிறது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











