குடும்பத்தில் சண்டை... பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா

சென்னை: நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தாராம் 'அட்டக்கத்தி' நந்திதா .

பொதுவாக அறிமுகப் படத்தில் கொழுக்.. மொழுக் என அறிமுகமாகும் நடிகைகள், அடுத்தடுத்த படங்களில் கன்னங்கள் வற்றிப் போய், உடல் மெலிந்து ஜீரோ சைஸ்க்காக மெலிந்து காணப்படுவார்கள். அதற்காக பட்டினி கிடந்ததாக பேட்டியும் கொடுப்பார்கள்.

ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு நடிகை 'அட்டக்கத்தி' நந்திதா நடிப்பதற்காக குடும்பத்தில் சண்டை போட்டு பட்டினி கிடந்ததாக தெரிவித்துள்ளார்.

நான் பெங்களூருக்காரி...

நான் பெங்களூருக்காரி...

நான் பெங்களூரை சேர்ந்தவள். நடிகையாக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. ஆனால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.

பிடிவாதக்காரியாக்கும்...

பிடிவாதக்காரியாக்கும்...

ஆனாலும் நடிகையாகியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். என் பெற்றோரிடம் பேசாமல் தனி அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். 3 நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.

நிபந்தனைகளோடு அனுமதி...

நிபந்தனைகளோடு அனுமதி...

நிபந்தனைகளுடன் என்னை நடிகையாக பெற்றோர் சம்மதித்தனர். படிப்பை முடித்துவிட்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஏற்றுக்கொண்டேன்.

அட்டகத்தி நாயகியானேன்...

அட்டகத்தி நாயகியானேன்...

‘அட்டகத்தி‘ பட வாய்ப்பு வந்தபோது ஏற்றுக்கொண்டேன். ‘நளனும் நந்தினியும்‘ விரைவில் வரவிருக்கிறது.

மேக்-அப் இல்லாமல் நடித்தேன்...

மேக்-அப் இல்லாமல் நடித்தேன்...

‘எதிர்நீச்சல்‘ படத்தில் மேக் அப் போடாமல் நடித்தேன். இரட்டை ஹீரோயின் கதை என்பதால் நான் நடிக்க மறுத்ததாக எழுதினார்கள். அது தவறு. என்ன வாய்ப்பு வந்தாலும் அதில் எனது கேரக்டர் என்ன என்பதை மட்டும்தான் பார்க்கிறேன். பிடித்திருந்தால் நடிக்கிறேன்.

4 படம் முடிச்சுட்டேன்...

4 படம் முடிச்சுட்டேன்...

ஒரு வருடத்துக்குள் 4 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன் என இவ்வாறு நந்திதா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X