பேயுடன் உடலுறவு கொள்வதாக 'கிலி' ஏற்படுத்தும் நடிகை
லண்டன்: பேயுடன் உடலுறவு கொள்வதாக பாலிவுட் நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடாஷா பிளாசிக். இவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.

புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும்...
அதில் தன்னுடைய படுக்கையறையில் அடிக்கடி கண்களுக்கு புலப்படாத ஒரு உருவம் தன்மீது படுத்துக்கொண்டு இயங்குவதாகவும் அந்த அனுபவம் தனக்கு மிகவும் புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

இதுபோல அடிக்கடி நடக்கிறது...
தன்னுடன் உடலுறவு கொண்டது ஒரு பேய்தான் என்று தன்னால் அடித்துக் கூற முடியும் என்றும், எப்போதெல்லாம் நான் படுக்கையறையில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் இதுபோல அடிக்கடி நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

அதை அனுபவிக்க தொடங்கிவிட்டேன்...
முதன்முறையாக தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் விவரிக்கும்போது "ஒரு நாள் படுக்கையில் இருந்தபோது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. எட்டிப்பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. எனது மேல் யாரோ படுப்பது போல கனமாக இருந்தது. ஆனால் உருவத்தை பார்க்க முடியவில்லை. ஒரு அரவணைப்பை, உடலின் கதகதப்பை மட்டும் என்னால் உணர முடிந்தது. அதன்பிறகு நான் அதை அனுபவிக்க தொடங்கிவிட்டேன்" என்று கூறினார்.

பேய்க்கதை விடுவதாக பாலிவுட்டில் கிசுகிசு...
நடாஷா பிளாசி தற்போது பாராநார்மல் ஆக்டிவிட்டி 2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகை தானே திரைக்கதை எழுதி பேய்க்கதை விடுவதாக பாலிவுட்டில் கிசுகிசு எழுந்துள்ளது. இவரை மனநல மருத்துவர்களிடம் அனுப்ப வேண்டும் என்றும் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











