கிளாமர்ல ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே.. பிரபல நடிகையின் வேற லெவல் போட்டோ ஷூட்!
சென்னை: பிரபல நடிகையின் வேற லெவல் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
மலையாளத்தில் திலீப்புடன் கிங் லையர் படத்தில் நடித்திருப்பவர் நடாஷா சுரி. இந்தியில், பா பா பிளாக்ஷீப், விர்ஜின் பானுப்ரியா படங்களில் நடித்திருக்கிறார்.
அமேசானில் வெளியான இன்சைட் எட்ஜ் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.

டிஜிட்டலில் ரிலீஸ்
முன்னாள் மிஸ் இந்தியாவான இவர், ஏராளமான விளம்பரங்களிலும் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். புஷன் படேல் இயக்கிய டேஞ்சரஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் அவருடன் பிபாஷா பாசு, கரண் சிங் குரோவர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிஜிட்டலில் ரிலீஸ் ஆனது. இவர் சில மாதங்களுக்கு முன் ஃபிளின் ரெமெடியோஸ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார்.

ஆபாச தகவல்கள்
அதில், தனது பெயரைப் போலவே நடாஷா சிங் சுரி என்ற பெயரில் சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி ஆபாச தகவல்களையும் புகைப்படங்களையும் ஃபிளின் என்பவர் பதிவிட்டு இருந்ததாகக் கூறி இருந்தார். இது பரபரப்பானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா டெஸ்ட்
'கடந்த சில நாட்களுக்கு முன் பூனேவுக்குச் சென்றிருந்தேன். மும்பை திரும்பியதும் சோர்வாக உணர்ந்தேன். காய்ச்சல், தொண்டை பிரச்னையும் இருந்தது. இதையடுத்து கொரோனா டெஸ்ட் செய்துகொண்டேன். அதில் எனக்கு பாசிட்டிவ் என்று வந்தது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறேன்' என கூறியிருந்தார்.

புகைப்படங்கள்
இப்போது கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அடிக்கடி தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருவார். அதன்படி அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. அதில் ஓவர் கிளாமராக இருக்கிறார் நடாஷா.

ஹாலிவுட்டுக்கே
இதையடுத்து ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர், ஆஹா, கிளாமர்ல ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே?' என்று கூறியுள்ளனர். வேறு சிலர், வாய்ப்பே இல்லை, நீங்க வேற லெவல்ல இருக்கீங்க என்று தெரிவித்துள்ளனர். சிலர் ஸ்டன்னிங், செம ஹாட் என்று வசமாக வர்ணித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











