Don't Miss!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வாவ்.. பார்ட்டி.. கேக்.. மியூஸிக்.. டான்ஸ்.. காதலருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்திய நயன்தாரா!
கோவா: விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை முன்னிட்டு பல சர்ப்ரைஸ் கிஃப்ட்டுக்களை வழங்கி அசத்தியுள்ளார் நடிகை நயன்தாரா.
Recommended Video
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ள, லிவிங் டூ கேதரில் வசித்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று தங்களின் காதலை கொண்டாடி வருகின்றனர்.
அஜித் பட நாயகியின் அடாவடி போஸ்..கிறங்கிப்போன ரசிகர்கள் !

படப்பிடிப்பு தொடங்கிவிட்டால்
தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கோவாவில் விடுமுறையை கழித்து வருகின்றனர். லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்தவர்கள் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டால் ஓய்வு கிடைக்காது என்பதால் தற்போது கிடைத்திருக்கும் விடுமுறையை பயன்படுத்தி வருகின்றனர்.

விக்கி எடுத்த போட்டோஸ்
கோவாவில் பிரைவேட் ஹவுஸில் தங்கியுள்ளனர் நயன்தாராவும் விக்கியும். அங்கு இயற்கையுடன் கொஞ்சி விளையாடிய நயன்தாரவின் போட்டோக்கள் அண்மையில் வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலான அந்த போட்டோக்களை விக்னேஷ் சிவன்தான் எடுத்திருந்தார்.

ரொமான்டிக் போட்டோ
இந்நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். நடிகை நயன்தாராவுடன் விக்கி எடுத்த ரொமான்டிக் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஸ்பெஷல் பார்ட்டி
கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாராவின் அம்மாவுடைய பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் நடிகை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் தனது காதலரின் பிறந்த நாளில் ஸ்பெஷல் பார்ட்டி, கேக், டான்ஸ், மியூஸிக் என சர்ப்ரைஸ் கிஃப்ட்டுக்களை கொடுத்து அசத்தியுள்ளார் நயன்தாரா.

மெழுகுவர்த்தி ஏற்றிய நயன்
நயன்தாரா கேக்கில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் ஒரு அழகான வீடியோ, இசை, நடனம் என களைக்கட்டும் பார்ட்டியின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார் மற்றும் அந்த வீடியோக்கள் வைரலாகி, நெட்டிசன்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வருகிறது.

கடவுள் அருள் பெற்றவர்
மேலும் இந்த வீடியோ நயன்தாரா பெயரில் உள்ள டிவிட்டர் கணக்கில் இருந்தும் ஷேர் செய்யப்பட்டுள்ளது. விக்கி பர்த்டே செலிபிரேஷன்.. சிறந்த ஒன்று என்றும் கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், விக்னேஷ் சிவன் கடவுள் வரம் பெற்றவர்தான் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.