காதலனுடன் கோவில் கோவிலாக சுற்றும் லேடி சூப்பர் ஸ்டார்.. நேத்து எந்த கோயில்ன்னு பாருங்க!

சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் நேற்றும் ஒரு கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.

நடிகை நாயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இது ஊரறிந்த விஷயம்.

வெளிநாடுகளுக்கு ஒன்றாக சுற்றுலா சென்று வரும் இவர்கள் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்வதாக தகவல் பரவியது. அதேநேரத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எப்போது திருமணம்?

எப்போது திருமணம்?

இதுதொடர்பாக இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேநேரத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் எப்போது ஊர் அறிய திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.

காதலருடன் தரிசனம்

காதலருடன் தரிசனம்

இந்நிலையில் நயன்தாரா தனது காதலருடன் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். அண்மையில் திருப்பதியில் தனது காதலருடன் சாமி தரிசனம் செய்தார் நயன்தார.

கோவில்களில் வழிபாடு

கோவில்களில் வழிபாடு

அதனை தொடர்ந்து மூக்குத்தியம்மன் படப்பிடிப்புக்காக கன்னியாகுமரி சென்ற அவர் பகவதி அம்மன் கோவிலில் தனது காதலருடன் வழிபாடு நடத்தினார். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் விக்னேஷ் சிவனுடன் வழிபட்டார் நயன்தாரா.

நடை மூடல்

நடை மூடல்

இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் இருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சென்ற நேரத்தில் ஸ்ரீபலி பூஜைக்காக மூலஸ்தான நடை மூடப்பட்டது.

மஞ்சள் நிற சுடிதார்

மஞ்சள் நிற சுடிதார்

இதையடுத்து நயன்தாராவும், அவரது காதலனும் சுமார் ½ மணி நேரம் காத்திருந்து நடை திறந்த பின்பு சாமி தரிசனம் செய்தனர். மஞ்சள் நிற சுடிதாரில் நயன்தாரா பக்தி பரவசத்துடன் நயன்தாரா பங்கேற்றார்.

செல்பி எடுக்க முயற்சி

செல்பி எடுக்க முயற்சி

நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவுடன் செல்பி எடுக்க முயன்றனர். ஆனால், அவருடன் வந்த காவலர்கள் ரசிகர்கள் யாரும் நெருங்காதவாறு தடுத்து இருவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

மனக்கசப்பால்

மனக்கசப்பால்

நயன்தாராவின் வருகையால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனாலேயே நயன்தாரா கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்கிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X