கால்பந்து வீராங்கனையா இல்ல மருத்துவ மாணவியா? பிகில் படத்தில் நயன்தாரவுக்கு என்னதான்பா ரோல்?!
சென்னை: பிகில் படத்தில் நயன்தாரா என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்த குழப்பம் இன்னும் தீரவில்லை.
நடிகர் விஜயின் 63வது படம் பிகில். இந்த படத்தின் மூலம் இயக்குநர் அட்லி மற்றும் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.
பிகில் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசைமைத்துள்ளார். பிகில் படம் குறித்து அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.

ஃபர்ஸ்ட் லுக்
படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்லேயே தெரியவந்தது.

கையில் அரிவாள்
இளம் வயதில் ஒரு விஜய் கையில் கால்பந்துடனும் மற்றொரு விஜய் வயதான தோற்றத்தில் காவி வேட்டியில் கையில் அரிவாளுடன் இருப்பதாகவும் அமைந்திருந்தது முதல் போஸ்டர். இந்நிலையில் விஜய் கால்பந்து கோச் என அரசல்புரசலாக தகவல் வெளியானது.

கால்பந்து கோச்
அண்மையில் பிகில் படத்தில் விஜய் பயன்படுத்திய ஐடிகார்டு சமூக வலைதளத்தில் லீக்காகி வைரலானது. இதன்மூலம் விஜய் கால்பந்து கோச் என்பது உறுதியானது.

மருத்துவ மாணவி
இதேபோல் பிகில் படத்தில் கதாநாயகி நயன்தாரா கால்பந்து வீராங்கனை என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிகில் படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











