For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெற்றிக்கண் தலைப்பு மட்டும்தான் பழசு.... கதை புதுசுதான்- விக்னேஷ் சிவன்

|
Nayanthara movie with Vignesh Shivan

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற நெற்றிக்கண் என்ற பெயரை வைத்துள்ளனர். அதற்கான முறையான அனுமதியை பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து நடிகை நயன்தாரா பெற்றுக்கொண்டார். அதனை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வரவர தமிழ் சினிமாவில் சொந்தமாக யோசித்து கதையையும், அந்தக் கதைக்கான தலைப்பையும் வைக்க தைரியமில்லாமல், முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அபார வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் மற்றும் பாக்யராஜின் படங்களின் கதையையும் படத்தலைப்பையும் வைத்து காலத்தை ஓட்டிக்கொண்டுள்ளனர்.

ஆனால், இவர்கள் அந்த படங்களின் தலைப்பை மட்டுமே வாங்கிவிட்டால் போதும், கதையாவது கத்தரிக்காயாவது, படத்தை ஓட்டிவிடலாம் என்ற நினைப்பில் தலைப்பை முன்னிலைப்படுத்தி படத்தை எடுத்துவிட்டு கையை சுட்டுக்கொள்கின்றனர்.

கவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்

பழைய தலைப்புகள்

பழைய தலைப்புகள்

இதற்கு உதாரணமாக, எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன், ரகசிய போலீஸ் மற்றும் என் தங்கை படங்களின் தலைப்பை வாங்கி சரத்குமார் மற்றும் அர்ஜூன் இருவரும் கையை சுட்டுக்கொண்டனர். அடுத்தாக தனுஷ், நடிகர் திலகம் சிவாஜியின் திருவிளையாடல் படத்தலைப்பை வாங்கி நடித்தார்.

இதில் பல படங்கள் தோல்வியடைந்தாலும் லெஜென்டிரி நாயகர்களின் படத்தலைப்பை வாங்கி புதிய கதைக்கு பொருத்தி படம் எடுத்து வெளியிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

நயன்தாரா பாதை

நயன்தாரா பாதை

அந்தப் பாதையில் தற்போது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் போக ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. அதிலும், நயன்தாரா செய்யும் ஒவ்வொரு விசயமும் இப்போதெல்லாம் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமாக கருதி மிக அழகாக காய் நகர்த்துகிறார். அதற்கு ஏற்றார்போல், அவருக்கு பக்க பலமாக அவரது காதலன் விக்னேஷ் சிவன் செயல்படுகிறார்.

காதலனுக்கு கை கொடுக்கும் நயன்தாரா

காதலனுக்கு கை கொடுக்கும் நயன்தாரா

விக்னேஷ் சிவனின் சினிமா முயற்சிகளுக்கு நயன்தாரா எல்லா விதத்திலும் கைகொடுத்து வெற்றி பெற செய்கிறார். இந்த அன்பின் அடையாளமாக விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல் படத்தில் தானே நடிக்க முன்வந்துள்ளார். அந்தப் படத்திற்காக நெற்றிக்கண் டைட்டிலை வாங்குவதற்காக மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இல்லம் தேடிச் சென்று அவரது மகள் புஷ்பா கந்தசாமியை சந்தித்தார். இத்தகவலை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கவிதாலயா நிறுவனம்

கவிதாலயா நிறுவனம்

பாலசந்தரின் கவிதாலயா நிறுவன தயாரிப்பில் 1981ஆம் ஆண்டு வெளியான படம் நெற்றிக்கண். இந்த திரைப்படத்தில் சரிதாவின் நடிப்பு, லட்சுமியின் பாந்தம், ரஜினியின் மாறுபட்ட வெரைட்டியான டபுள் ஆக்ஷ்ன் என்று கலை கட்டிய படம். தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில் ரஜினி நடித்திருந்த இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் இளையராஜாவின் இன்னிசையில், சூப்பட் டூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்ததும் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாகும்.

கீர்த்தி சுரேஷ் அம்மா

கீர்த்தி சுரேஷ் அம்மா

குறிப்பாக "மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் வயசு என்ற பாடலும்..." "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற பாடலும், அன்றைய காலகட்ட பெருசுகளின் மத்தியில் வெகு பிரபல்யம். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா நடித்திருந்தார்.

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அப்பட டைட்டிலைத்தான் விக்னேஷ் சிவனின் முதல் தயாரிப்புக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். டைட்டில் என்று வந்துவிட்டாலே பல சிக்கல் இன்றைய தமிழ் சினிமாவில் உள்ளது.

நெற்றிக்கண்

அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கும் இப்படக் கதைக்கும் பழைய நெற்றிக்கண்னுக்கும் சம்பந்தமில்லை. இத்தலைப்புகளை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிய வரும்போது, அதன் பழைய நிறுவனத்திடம் ஒப்புதல் பெற்ற கடிதம் இருந்தால் தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நிலையில் சில தினங்களுக்கு முன் பாலசந்தர் இல்லம் சென்று அவரது மகள் புஷ்பா கந்தசாமியிடம் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அனுமதி பெற்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா 65வது படம்

நயன்தாரா 65வது படம்

த்ரில்லர் படமாக உருவாகும் நெற்றிக்கண் நயன்தாராவின் 65ஆவது படமாகும். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. பழைய டைட்டிலில் பல படங்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. சில படங்கள் மட்டுமே அபார வெறி பெறுகிறது. அதே மாதிரி இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள்.

English summary
Director Vignesh Sivan's new film Netrikann produced by Rowdy Pictures has named the winner of the movie 'Rajinikanth'. Actress Nayantharaobtained the permission from Balachander's Kavithalayaa Production. Vignesh Sivan posted it on his Twitter page.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more