நயன்தாரா நடிக்கும் திரில்லர் படம் - விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்
Recommended Video
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய திரில்லர் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கப் போகிறார். அவருடன் கூர்க்கா படத்தில் நடித்த நாயும் நடிக்கபோகிறது என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இன்று தென்னிந்திய திரையுலகையே தன் நடிப்பால் கட்டிப்போட்டு லேடி சூப்பர் ஸ்டார், தலைவி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி ஹீரோயின் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் தான் சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

சினிமா திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பல விமர்சனங்களுக்கு ஆளானவர். ஆனால் அதை எதையும் கண்டு பயந்து ஒதுங்காமல், தன்னை மேலும் பலப்படுத்தி கொண்டவர். ஹீரோயினுக்கு முக்கியதுவம் இருக்கும் படங்களாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிப்பது நயன்தாராவின் வெற்றிக்கு கூடுதல் பலம்.
ஒன்றின் பின் ஒன்றாக படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது தளபதி விஜயுடன் பிகில் படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் சயீரா நரசிம்மா ரெட்டி மற்றும் மலையாளத்தில் லவ் ஆக்ஷன் ட்ராமா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து அவள் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கும் திரில்லர் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்றும் அந்த படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் ஹாலிவுட் நடிகரான லுக் கென்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் ஒரு பக்கம் இருக்க யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்க்கா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த நாயும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
நயன் தாரா நடிப்பில் வெளியான கொலையுதிர் காலம், ஐரா போன்ற திரில்லர் படங்கள் சுமாராக தான் ஓடியது என்றாலும் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் இந்த திரில்லர் படம் நிச்சயம் வெற்றி பெரும் என் எதிர்பார்க்கிறார்கள் நயன்தாராவின் ரசிகர் பட்டாளம்.


Click it and Unblock the Notifications











