இந்த ரணகளத்துலேயும் உங்களுக்கு குதூகலம் கேட்குதா.. வைரலாகும் நயன் - விக்கி ரொமான்ஸ் போட்டோஸ்!
சென்னை: மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் கைத்தட்டிய போது கூட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரொமான்ஸ் செய்தது தெரியவந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை உலகம் முழுக்க 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரயில்கள் ரத்து
நாடு முழுக்க கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 144 தடை ஆணை மற்றும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பல மாநிலங்களிலும் சாலை போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் தமிழத்தில் 144 தடை அமலுக்கு வரவுள்ளது. கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவர்களுக்கு நன்றி
இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்திய மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மாலை 5 மணிக்கு வீட்டு வாசலில் நின்றப்படி கைகளை தட்டியும் மணியோசை எழுப்பியும் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.

பிரபலங்கள் ஆதரவு
இதனை இந்திய மக்கள் அனைவரும் கடைப்பிடித்தனர். பகல் முழுவதும் வீடுகளுக்குள் இருந்த மக்கள் மாலை 5 மணிக்கு வீடுகளுக்கு வெளியே வந்து கைகளை தட்டி மருத்துவர்களுக்கு நன்றி கூறினர். பிரதமரின் இந்த கோரிக்கைக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

நயன்- விக்கி
பிரபலங்கள் பிரதமரின் கோரிக்கைப்படி கைகளை தட்டியும் மணியோசை எழுப்பியும் நன்றி தெரிவித்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை நயன்தாராவும் அவரது காதலரான விக்னேஷ் சிவனும் ஒன்றாக கைகளை தட்டி நன்றி தெரிவித்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

ரொமான்ட்டிக்காக..
அதாவது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒருவர் கையில் ஒருவர் தட்டி ரொமான்ட்டிக்காக நன்றி கூறியுள்ளனர். இருவரும் ஒன்றாக கைகளை தட்டும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நயன்தாரா மட்டும் தனியாக கை தட்டும் போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

குதூகலம்..
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த ரணகளத்துலேயும் உங்களுக்கு குதூகலமா என கேட்டுள்ளனர். நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் இல்லை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்றும் மாதக்கணக்கில் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











