மீண்டும் தனி விமானத்தில்.. பக்குவமாய் இறக்கிவிடும் காதலர்.. ஜாலியாய் கை கோர்த்து நடக்கும் நயன்!
சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து நடக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் என டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார்.

விக்கியுடன் காதல்
அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ள நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

வாயே திறக்கவில்லை
இருவரும் லிவிங் டூகெதரில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் இருவரும் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக கூறி வந்தனர். ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

வெளிநாடு செல்லவில்லை
அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து வரும் இந்த ஜோடி அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்கள். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக வெளிநாடு சுற்றுலா செல்லவில்லை.

கோவா ஜாலி ட்ரிப்
இருப்பினும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு லாக்டவுனின் போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் கோவா சென்றனர். தனி விமானம் மூலம் இருவரும் கோவா சென்று சில் செய்த போட்டோக்கள் வெளியாகி வைரலானது.
Recommended Video

ஓணம் செலிபிரேஷன்
அதனை தொடர்ந்து ஓணம் கொண்டாடவும் விக்கியுடன் கேரளாவுக்கு தனி விமானத்தில் சென்றார் நயன்தாரா. அவர்கள் இருவரும் ட்ரெடிஷ்னல் உடையில் ஓணம் கொண்டாடிய போட்டோக்கள் வெளியாகி ட்ரென்ட்டானது. பின்னர் மீண்டும் நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் மீண்டும் தனி விமானத்தில் கொச்சி சென்றனர்.

அண்ணாத்த ஷூட்டிங்
பின்னர் நயன்தாரா மட்டும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க தனி விமானத்தில் சென்றார். இப்படி நயன்தாராவும் விக்கியும் அடிக்கடி தனி விமானத்தில் பறக்கும் போட்டோக்கள் கடந்த 2 ஆண்டுகளாக சமூக வலைதளத்தை திணறடித்து வருகிறது.

நயனும் விக்கியும்..
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் விக்கியும் மீண்டும் தனி விமானத்தில் பயணம் செய்த போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது. நயன்தாராவும் விக்கியும் கொச்சி சென்றுள்ளனர்.

பக்குவமாய் பிடித்து..
விமானத்தில் இருந்து இருவரும் இறங்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. இதில் விமானத்தில் இருந்து இறங்கிய விக்னேஷ் சிவன், நயன்தாராவின் கையை பக்குவமாய் பிடித்து இறக்கி விடுகிறார்.

காதலரின் கை கோர்த்து
மற்றொரு போட்டோவில் இருவரும் கையை கோர்த்தப்படி ஜாலியாக நடந்து செல்கின்றனர். கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் விமான நிலைய பகுதிகளில் மழை பெய்து ஈரமாக காட்சியளிக்கிறது.

தலைவி லேண்டட் இன் கொச்சி
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் ரசிகர்கள் தலைவி லேண்டட் இன் கொச்சி என கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











