தலையில் முக்காடு.. காதலர் விக்கியுடன் தரையில் அமர்ந்து சாப்பிடும் நயன்தாரா.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, அஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
முன்பெல்லாம் எந்த மாதிரியான கதை என்றாலும் கதாபாத்திரம் என்றாலும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொள்ளும் நயன்தாரா, தற்போது தனக்கான முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஒன்றாக வசிக்கின்றனர்
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணத்திற்கு முன்பே ஒன்றாக வசித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அது குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

திருமணம் முடிந்துவிட்டதா?
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் நயன்தாரா விரலுடன் தனது விரலை கோர்த்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதா என கேட்டு வந்தனர்.

கடந்த ஆண்டு
ஆனால் அதற்கும் இருவரும் பதில் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இருவரும் தொடர்ந்து தனி விமானத்தில் பயணிக்கும் போட்டோக்கள் வெளியான வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு லாக்டவுனுக்கு பிறகு சற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கோவாவில் ஜாலி
இதனை தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்று நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். ஓணம் கொண்டாட்டங்களை முடித்த கையோடு கோவாவுக்கு பறந்தனர். அங்கு தனி வில்லாவில் ஓய்வை கழித்தனர் விக்கியும் நயனும்.
தெறிக்கவிடும் வீடியோ
அதன் பிறகு மலையாள வருட பிறப்பை முன்னிட்டு இருவரும் மீண்டும் தனி விமானத்தில் கேரளாவுக்கு சென்றனர். அந்த போட்டோக்களும் சமூக வலை வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் விக்கி மற்றும் நயன்தாராவின் வீடியோ ஒன்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

தரையில் அமர்ந்து
அதாவது, வட இந்திய மாநிலம் ஒன்றுக்கு சென்றுள்ள நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அங்கு உணவளிக்கப்படும் ஒரு மண்டபத்தில் சாப்பிடுகின்றனர். தரையில் அமர்ந்து அவர்கள் இருவரும் சப்பாத்தி சாப்பிடுகின்றனர்.

தலையில் முக்காடு
இந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் தலையில் காவி நிற கர்ச்சீப்பபை கட்டியிருக்கிறார். நடிகை நயன்தாரா தலையில் தனது ஷாலால் முக்காடு போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் செம க்யூட் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











