Don't Miss!
- News
பேரறிவாளன் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி! உடல் நலம் பேண வேண்டும்! அன்புடன் அன்புமணி போட்ட கண்டிஷன்!
- Sports
மீண்டும் ஏதேனும் பிரச்சினையா? குர்னல் பாண்டியாவை வெளியே அனுப்பிய கம்பீர்.. 3 மாற்றம் தேவையா?
- Technology
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- Finance
424 ஊழியர்களை பணிநீக்கம்.. அதிர்ச்சி கொடுத்த பெங்களூர் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!
- Automobiles
மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எஸ்கேப்பில் ஜோடியாக படம் பார்த்த விக்கி- நயன்... தெறிக்கவிடும் போட்டோஸ்.. என்ன படம் தெரியுமா?
சென்னை: நடிகை நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாக தியேட்டரில் படம் பார்த்த போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றன.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதனிடையே இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றனர்.
யுஏ சான்று பெற்ற விக்ரமின் மகான்...எப்போ ரிலீஸ் தெரியுமா ?

ஆஸ்கர் வரை சென்ற கூழாங்கல்
இவர்களின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு சென்றது ஆனால் டாப் 15 படங்களுக்கான தேர்வின் போது ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது கூழாங்கல் திரைப்படம்.

ராக்கி திரைப்படம்
இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தை விக்கி மற்றும் நயன்தாரவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ளது.

பாராட்டிய ரஜினிகாந்த்
இந்தப் படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி, ரோகினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவியை நேரில் அழைத்து பாராட்டினார்.

ஜோடியாக படம் பார்த்த விக்கி நயன்
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாக ராக்கி படத்தை பார்த்துள்ளனர். சத்யம் சினிமாஸின் எஸ்கேப் தியேட்டரில் இருவரும் படம் பார்த்த போட்டோக்கள் இணையத்தை வெளியாகியுள்ளது. இந்த போட்டோக்களை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.