இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: இம்மாத இறுதிக்குள் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எளிமையாக திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

பிரபுதேவாவுடன் காதல்
முதலில் நடிகர் சிம்புவை காதலித்தார் நயன்தாரா. ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையால் அவர்களின் காதல் முறிந்தது. பின்னர் நடிகர் பிரபு தேவாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்த போது இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர்.

விக்கியுடன் காதல்
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் நீண்ட காலமாக காதல் உறவில் உள்ளார் நயன்தாரா. ஏற்கனவே இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்து விட்டது என அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

கோவிலில் திருமணம்?
இந்நிலையில் இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் இருவரும் கோவிலில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைத்து மிக எளிமையாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல்
ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து எந்த தகவலும் உறுதிப்படுத்தவில்லை. தற்போது நயன்தாரா மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை விக்கிதான் இயக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











