கையில் குழந்தையுடன் நயன்தாரா.. அருகிலேயே விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் அருகில் கையில் குழந்தையுடன் இருக்கும் போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

மலையாள நடிகையான நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உயர்ந்தார் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார்.

மூச்சுவிட சிரமப்படும் 6 மாத குழந்தை... அரிய வகை நோயால் பாதிப்பு - உதவுங்கள் ப்ளீஸ்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு ஆரம்பமான புதிதில் நடிகர் சிம்புவை காதலித்தார். கருத்து வேறுபாட்டால் சிம்புவை பிரிந்த நடிகை நயன்தாரா பின்னர் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார்,.

பிரபு தேவாவுடன் காதல் - முறிவு

பிரபு தேவாவுடன் காதல் - முறிவு

பிரபு தேவாவை திருமணத் செய்து கொண்டு செட்டிலாக நினைத்த நயன்தாரா, சினிமாவுக்கு என்ட் கார்டு போடும் முடிவுக்கு வந்தார். ஆனால் பிரபு தேவாவுடனான அந்தக் காதலும் முறிந்தது. இதனால் மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் நயன்தாரா. இந்நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார்.

விக்கியுடன் காதல் - ஒன்றாக வசிக்கும் ஜோடி

விக்கியுடன் காதல் - ஒன்றாக வசிக்கும் ஜோடி

அப்போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். மேலும் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அந்த போட்டோக்களையும் தங்களின் இணையதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

கோவா டூர் - வைரலான போட்டோஸ்

கோவா டூர் - வைரலான போட்டோஸ்

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருந்த நயனும் விக்கியும் ரிலாக்ஸேஷன் அறிவித்த பிறகு, கோவாவில் ஓய்வை கழித்தனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. தொடர்ந்து ஓணம் செலிபிரேஷனுக்கு தனி விமானத்தில் கேரளா சென்ற இருவரும் கோலாகலமாக ஓணம் கொண்டாடினர் அந்த போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி

தொடர்ந்து இருவரும் வெளியூர் செல்லும் போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி ட்ரென்ட்டாகி வருகிறது. நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க விமானத்தில் சென்ற போட்டோக்களும் வெளியாகி ட்ரென்ட்டானது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

கையில் மோதிரம் - நயன்தாரா பதில்

கையில் மோதிரம் - நயன்தாரா பதில்

அப்போது நயன்தாரா கையில் போட்டிருக்கும் மோதிரம் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நயன்தாரா அது தங்களின் நிச்சயதார்த்த மோதிரம் என்றார். இதன் மூலம் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை போட்டுடைத்தார் நயன்தாரா.

ஜோடியாக உள்ள புதிய போட்டோ

ஜோடியாக உள்ள புதிய போட்டோ

இதனிடையே நயன்தாராவின் தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் நடத்தும் முடிவில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாக உள்ள புதிய போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

கையில் குழந்தையுடன் நயன்தாரா

கையில் குழந்தையுடன் நயன்தாரா

அதில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையை தூக்கி வைத்துள்ளார். அருகில் விக்னேஷ் சிவன் உள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இப்போது தான் நிச்சயதார்த்தம் முடிந்தது, அதற்குள் குழந்தையா என கிண்டலடித்து வருகின்றனர்.

அண்ணன் குழந்தை ரொம்ப செல்லம்

அண்ணன் குழந்தை ரொம்ப செல்லம்

சிலர் நயன்தாரா கையில் வைத்துள்ள குழந்தை அவரது அண்ணன் குழந்தையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நயன்தாராவின் அண்ணனுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை நயன்தாராவுக்கு ரொம்பவே செல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X