அடுத்தடுத்து லைன் கட்டும் படங்கள்.. ரசிகர்கள் கொண்டாடும் நயன்தாரா!

சென்னை : நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான கனெக்ட் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் ஜவான் படத்தில் முக்கியமான கேரக்டரில் ஷாருக்குடன் இணைந்து நடித்து வருகிறார் நயன்தாரா.

கடந்த ஆண்டில் நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், வாடகைத்தாய் மூலம் இரு குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார் நயன்தாரா.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் த்ரில்லர் பாணியில் கனெக்ட் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா. ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடித்துவரும் ஜவான் படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவான் படத்தில் நயன்தாரா

ஜவான் படத்தில் நயன்தாரா

ஜவான் படத்தை இயக்கிவருகிறார் பிரபல இயக்குநர் அட்லி. இவரது இயக்கத்தில் முன்னதாக ராஜா ராணி, பிகில் படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்நிலையில் தற்போது ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நிலையில் நயன்தாராவும் முக்கியமான கேரக்டரில் நடித்துவருவதாக கூறப்பட்டுள்ளது.

ஜெயம் ரவியுடன் நயன்தாரா

ஜெயம் ரவியுடன் நயன்தாரா

இந்தப் படத்தை தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இணைந்து இறைவன் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ஜெயம் ரவி -நயன்தாரா காம்பினேஷனில் மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஜவான் மற்றும் இறைவன் படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நயன்தாரா

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நயன்தாரா

இந்தப் படங்களை தொடர்ந்து கடந்த ஆண்டில் சூப்பர் ஹிட்டடித்த திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திலும் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தனிஒருவன் 2 படத்திலும் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படம்

ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படம்

ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தனி ஒருவன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நயன்தாரா. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தப் படத்திலும் நயன்தாரா ஜெயம்ரவிக்கு ஜோடியாகவுள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் பிசி

அடுத்தடுத்த படங்களில் பிசி

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாகியுள்ள நயன்தாரா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துவருவது அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு நயன்தாரா அம்மாவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X