குஜராத்தி படத்தை தயாரித்த நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ்.. ஏப்ரல் 28ல் ரிலீஸ்!

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டில் மகாபலிபுரத்தை அடுத்த ரெசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களது திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான் என முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இவர்கள் இருவரின் காதலுக்கு அடித்தளமாக அமைந்தது நானும் ரவுடிதான் படம். இதன் நினைவாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி சிறப்பான படங்களை தயாரித்து வருகின்றனர்.

நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி

நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் என்ற படத்தில் இணைந்திருந்த நிலையில், இந்தப் படத்தின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகள் நீடித்த இவர்களின் காதல் கடந்த ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. மகாபலிபுரத்தை அடுத்த ஒரு ரெசார்ட்டில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நயன்தாரா அடுத்தடுத்த படங்கள்

நயன்தாரா அடுத்தடுத்த படங்கள்

திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் ஜவான், தமிழில் இறைவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. விரைவில் ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 படம் துவங்கவுள்ள நிலையில், அதிலும் நயன்தாராவே நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்

நானும் ரவுடிதான் என்ற படத்தில்தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்திருந்தார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில் ராதிகா சரத்குமாரும் அவருக்கு அம்மாவாக அதிரடி கிளப்பியிருந்தார். இந்தப் படத்தில்தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது இவர்களது காதல் திருமணத்தில் முடிந்து வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆகியுள்ளனர்.

விக்னேஷ் சிவன் அடுத்தப்படம்?

விக்னேஷ் சிவன் அடுத்தப்படம்?

அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவனை அடுத்த கமிட்மெண்ட்டில் ஈடுபடுத்த நயன்தாரா வெகுவாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக படமியக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டிலும் இளம் ஹீரோவிடம் விக்னேஷ் சிவன் கதை சொல்லி, ஓகே வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குஜராத்தியில் படத்தயாரிப்பு

குஜராத்தியில் படத்தயாரிப்பு

இந்நிலையில் குஜராத்தி மொழியில் தங்களின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் சுப் யாத்ரா என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் மல்ஹார் தாகர் மற்றும் கஜ்ஜார் மோனல் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் மணீஷ் சைனி இயக்கியுள்ளார். தமிழில் வெளியான ஆண்டவன் கட்டளை என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தற்போது ரவுடி பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X