Nayanthara: மழை வரும் அறிகுறி மனதினில் தெரியுதாம் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு.. க்யூட் போட்டோ இதோ!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கோலிவுட்டில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இவர்கள் இருவரும் தயாரிப்பில் மட்டுமில்லாமல் தனித்தனியாக தங்களது வேலைகளிலும் சிறப்பாக இயங்கி வருகின்றனர். இதனிடையே தங்களது குழந்தைகளின் வளர்ப்பிலும் தனி கவனம் செலுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது.

தங்களின் குழந்தைகளுடன் இணைந்து இவர்கள் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுடன் மட்டுமில்லாமல் தனியாகவும் இந்த ஜோடி அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரையும் தனித்தனியாக ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் தான் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

nayanthara vignesh shivan instagram tamil cinema

நயன்தாரா & விக்னேஷ் சிவன் ஜோடி: நடிகை நயன்தாரா தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைத்துறையில் நாயகியாக கலக்கி வருகிறார். தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். 7 ஆண்டுகள் தொடர் காதலை தொடர்ந்து இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணம் மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஆச்சரியங்களை இந்த ஜோடி பரிசளித்தது. உடனடியாக வாடகை தாயின் மூலம் உயிர் மற்றும் உலக் என இரு குழந்தைகளின் பெற்றோராக இவர்கள் தங்களை அறிவித்துக் கொண்டனர்.

அடுத்தடுத்த முயற்சிகள்: இது குறித்து பல சர்ச்சைகள் வெளியான சூழலில் இதையெல்லாம் மௌனமாக இவர்கள் சமாளித்தனர். இந்நிலையில் தொடர்ந்து ரௌடி பிக்சர்ஸ் மூலம் அடுத்தடுத்த படங்களையும் தயாரித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனராகவும் அடுத்ததாக எல்ஐசி படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இவையெல்லாம் போதாது என்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்தடுத்த காஸ்மெட்டிக் தொழிலிலும் தங்களை இணைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இவர்களை தொடர்ந்து ஆக்டிவாக பார்க்க முடிகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: இருவரும் தொடர்ந்து இணைந்து அடுத்தடுத்த போஸ்ட்களை வெளியிட்டு வருகின்றனர். தங்கள் குழந்தைகளுடன் மட்டுமில்லாமல் தனியாகவும் இந்த ஜோடி அடுத்தடுத்த க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மழை பெய்யும் இரவில் இருவரும் யாரும் இல்லாத சாலையில் தனியாக குடை பிடித்தபடி செல்லும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ரொமாண்டிக் புகைப்படம்: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து ரொமாண்டிக்கான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஜோடியின் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்த போட்டோஷுட்களுக்கான ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது எல்ஐசி படத்தில் விக்னேஷ் சிவன் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல நடிகை நயன்தாராவும் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X