கோவாவில் காதலனுடன் குதூகலமாய் இருக்கும் நயன்தாரா.. வைரலாகும் நீச்சல் குள போட்டோஸ்!

கோவா: நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் கோவாவில் ஓய்வை கழித்து வரும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

Nanyanthara Vacation! Vignesh Shivan Nayan Off to GOA | Filmibeat Tamil

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் தன்னை வைத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.

தனி விமானத்தில்

தனி விமானத்தில்

அவ்வப்போது இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றும் போட்டோக்கள் வெளியாவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனி விமானத்தில் தனது சொந்த ஊரான கொச்சிக்கு சென்றார்.

காதலருடன் ஓணம்

காதலருடன் ஓணம்

காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா விமானத்தில் சென்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதனை தொடர்ந்து நயன்தாரா தனது காதலர் விக்கி மற்றும் தனது அம்மாவுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

கோவாவில் ஜாலி

கோவாவில் ஜாலி

அந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரென்ட்டானது. இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாராவின் மேலும் ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் ஓய்வை கோவாவில் கழித்து வருகின்றனர்.

விக்கி ஷேர் செய்த போட்டோ

விக்கி ஷேர் செய்த போட்டோ

கோவாவில் உள்ள ஒரு பிரைவேட் ஹவுஸில் தனது காதலர் விக்கியுடன் ஓய்வை கொண்டாடி வருகின்றார் நயன்தாரா. இதற்கான ஒரு போட்டோவை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நிஜமாவே நீண்ட நீண்ட...

நிஜமாவே நீண்ட நீண்ட...

டாப்பில் உள்ள நடிகை நயன்தாரா, நீச்சல் குளத்தின் ஓரம் நிற்பதாக உள்ளது அந்த போட்டோ. அந்த போட்டோவுக்கு, கட்டாய விடுமுறைக்கு பிறகு, விடுமுறை மூடில் அடியெடுத்து வைக்கிறோம். நிஜமாவே நீண்ட நீண்ட நீண்ட நாட்களுக்கு பிறகு என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இதுதான் ஒரே வழி

இதுதான் ஒரே வழி

மேலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், "மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம், நம்பிக்கையுடன் அவற்றை மேம்படுத்துவோம். இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகையை அழைப்பதற்கான ஒரே வழி இதுதான்" என்று எழுதினார்.

நாளுக்கு நாள் தீவிரம்

நாளுக்கு நாள் தீவிரம்

நயனும் விக்னேஷும் ஒவ்வொரு நாளும் தங்கள் காதல் வலுவடைந்து வருவதை நிரூபித்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் தற்போது திருமணத்தை பற்றி யோசிக்க முடியாது என இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X