மும்பையில் ஜவான் சூட்டிங்கை முடித்த நயன்தாரா.. அடுத்தக்கட்ட சூட்டிங் எங்கே தெரியுமா?
மும்பை : நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் இரு மாதங்களில் படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் மும்பையில் தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிலும் நயன்தாரா இணையவுள்ளார்.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக தன்னை நீண்ட ஆண்டுகளாக நிலைநிறுத்தியுள்ள நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுக்கவுள்ளார். முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷாவாக கொண்டாடப்படும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஜவான் பட சூட்டிங்
ஜவான் படத்தில் அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துவரும் நிலையில், அந்தப் படத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் இரு மாதங்களில் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தங்கியுள்ள நயன்தாரா
இந்தப் படத்தின் சூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்பதற்காக மும்பையிலேயே தங்கியுள்ளார் நயன்தாரா. அவருடன் விக்னேஷ் சிவனும் தங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது மும்பையில் தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்ற இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்றைய தினம் சென்னை திரும்பியுள்ளார் நயன்தாரா. அவருடன் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குழந்தைகளும் மும்பை விமானநிலையத்தில் சென்றதை பார்க்க முடிந்தது.

ராஜஸ்தானில் அடுத்தக்கட்ட சூட்டிங்
இதனிடையே இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் இன்னும் சில தினங்களில் ராஜஸ்தானில் துவங்கவுள்ளது. இந்த சூட்டிங் எப்போது துவங்கும் என்பதை படக்குழுவினர் விரைவில் அறிவிக்கவுள்ளனர். இதனிடையே மும்பையில் 9 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற படத்தின் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் இருத்தி வைக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விமானநிலையத்தில் குழந்தைகளுடன் நயன்தாரா
தான் சூட்டிங் செல்லும் இடங்களில் எல்லாம் தன்னுடைய கணவர், குழந்தைகளுடன் செல்வதை வழக்கமாக்கியுள்ளார் நயன்தாரா. அதையொட்டியே தற்போது மும்பை விமானநிலையத்தில் இவர்கள் அனைவரையும் பார்க்க முடிந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலிவுட்டில் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த நயன்தாரா, தன்னுடைய கணவருடன் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்கள்
ஜவான் படத்தின்மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள நயன்தாரா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் நடித்துவரும் நயன்தாரா, அடுத்ததாக ஜெயம் ரவி -ஜெயம் ராஜா கூட்டணியில் உருவாகும் தனி ஒருவன் 2 படத்திலும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட ஆண்டுகளாக தென்னிந்திய அளவில் தன்னை சிறப்பான நாயகியாக நிலைநிறுத்தியுள்ளார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications











