காட்பாதர் சூட்டிங்கை முடித்த நயன்தாரா... அடுத்தடுத்த அப்டேட் வரப் போகுதாம்!
ஐதராபாத் : சிரஞ்சீவி, நயன்தாரா லீட் கதாபாத்திரங்களில் நடிக்கும் காட்பாதர் படத்தை இயக்கி வருகிறார் ஜெயம் ராஜா.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான வெற்றிப்படமான லூசிபரின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் படத்தில் தனது முக்கிய காட்சிகளை நயன்தாரா நிறைவு செய்துள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

நடிகர் சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்துள்ள படம் ஆச்சார்யா. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படம் கடந்த மாதங்களிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா சூழல் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனது.

காட்பாதர் படம்
தெலுங்கில் ரிலீசுக்கு காத்திருக்கும் ஆர்ஆர்ஆர் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்களின் வெளியீட்டிற்கு பிறகு ஆச்சார்யா படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிரஞ்சீவி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் காட்பாதர் படத்தில் தனது முக்கிய காட்சிகளை நடிகை நயன்தாரா நிறைவு செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜா அறிவித்துள்ளார்.

லூசிபர் ரீமேக்
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வரும் நிலையில் படத்தின் நாயகன் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதித்ததால் படத்தின் சூட்டிங் பாதிக்கப்பட்டு இந்த மாதத்தின் துவக்கத்தில் மீண்டும் சூட்டிங் துவங்கியது. சிரஞ்சீவி சூட்டிங்கில் கலந்து கொண்டார்.

மஞ்சு வாரியர் கேரக்டரில் நயன்
இந்நிலையில் நயன்தாரா போர்ஷனை படக்குழு முடித்துள்ளது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். முன்னதாக சைரா என்ற படத்தில் சிரஞ்சீவியின் மனைவியாக நடித்துள்ள நயன்தாரா, இந்தப் படத்தில் தங்கையாக நடித்துள்ளார். இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் படக்குழு துவக்கவுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவியுடன் இணைந்த ஜெயம் ராஜா
அநேகமாக ரீமேக் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வருபவர் ஜெயம் ராஜா. இவரது படங்களில் திரைக்கதை சிறப்பாக அமையும். தனது தம்பியை வைத்து அதிகமான படங்களை இயக்கியுள்ள ஜெயம் ராஜா மற்ற நடிகர்களுடனும் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது சிரஞ்சீவியுடன் சிறப்பான லூசிபர் கதையுடன் களமிறங்கியுள்ளார்.

மூன்றாவது முறையாக கூட்டணி
படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் தனி ஒருவன், வேலைக்காரன் படங்களில் நடித்துள்ள நயன்தாரா இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். முந்தைய இரு படங்களின் வெற்றியை இந்தப் படத்திலும் இந்தக் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











