For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விக்னேஷ் சிவனை நெகிழவைத்த நயன்தாரா..துபாயில் செம சர்பிரைஸ்..கொடுத்து வைத்த கணவர் நீங்க தான்!

  |

  சென்னை : விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு நயன்தாரா துபாயில் செம சர்பிரைஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  போடா போடி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரௌடிதான் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

  இந்த படத்தின் போதே நயன்தாராவும், விக்கியும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர். கோவில், சினிமா நிகழ்ச்சி என எங்கு சென்றாலும், இருவரும் அழகாக கைகளை கோர்த்தபடியே சென்று க்யூட் ஜோடி என பெயர் எடுத்தனர்.

   சிலர் முழுசா டிரஸ் போட்டாலும் துப்பலான்னு தோனும்.. ஆனா நயன்தாரா நீச்சல் உடை... டிஸ்கோ சாந்தி பேட்டி சிலர் முழுசா டிரஸ் போட்டாலும் துப்பலான்னு தோனும்.. ஆனா நயன்தாரா நீச்சல் உடை... டிஸ்கோ சாந்தி பேட்டி

  நயன்தாரா, விக்கி

  நயன்தாரா, விக்கி

  நயன்தாரா, விக்கி திருமணத்தை அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் தடபுடலாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சூர்யா, ஜோதிகா, மணிரத்னம், ஷாருக்கான், அனிருத், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  விரைவில் வீடியோ

  விரைவில் வீடியோ

  இவர்களது திருமணம் கோலிவுட்டே வாய்பிளக்கும் அளவுக்கு நடத்தப்பட்டாலும், அதற்காக விக்கி - நயன் ஜோடி எந்தவித செலவும் செய்யவில்லை, திருமணத்திற்கான மொத்த செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கவனித்துக்கொண்டது. இவர்களின் திருமண வீடியோ வெளியிடும் உரிமைத்தை நெட்பிளிக்ஸ் வைத்துள்ளதால், விரைவில் திருமண வீடியோ வெளியாக உள்ளது.

  2வது ஹனிமூன்

  2வது ஹனிமூன்

  இதனை தொடர்ந்து கடந்த மாதம் இரண்டாவது ஹனிமூனுக்காக ஸ்பெயினுக்கு சென்றனர் விக்கியும் நயனும். ஸ்பெயினின் பார்சிலோனா, வெலன்சியா என பல நகரங்களில் சுற்றி வந்த அவர்கள், ரொமான்டிக் போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தினர். அந்த போட்டோக்கள் இணையத்தில் ட்ரெண்ட்டானது.

  இன்ப அதிர்ச்சி

  இன்ப அதிர்ச்சி

  இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை துபாயில் கொண்டாடி உள்ளார். மேலும், விக்கிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் துபாயில் இருக்கும் புர்ஜ் கலிஃபாவுக்கு விக்னேஷ் சிவனின் அம்மா மற்றும் சகோதரியையும் வரவழைத்து அவரை அன்பால் திக்குமுக்காட வைத்திருக்கிறார் நயன்தாரா.

  இதை விட ஸ்பெஷல் வேறு இருக்க முடியாது

  இதை விட ஸ்பெஷல் வேறு இருக்க முடியாது

  பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது,என் மனைவி, என் தங்கம் சர்பிரைஸ் கொடுத்தார். புர்ஜ் கலிஃபாவுக்கு கீழ் எனக்கு முக்கியமானவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம். இதை விட ஸ்பெஷல் வேறு இருக்க முடியாது. எப்பொழுதும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், கொடுத்து வைத்த கணவர் நீங்க தான் என்று கூறி கருத்துக்களை பகிர்ந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் கூறியுள்ளனர்.

  English summary
  Actress nayanthara gives surprise Birthday party for vignesh shivan. photos trending on social media
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X