ஓணம் பண்டிகைக்காக காதலருடன் தனி விமானத்தில் பறந்த நயன்தாரா.. வேற லெவலில் வைரலாகும் போட்டோ!

சென்னை: நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகை கொண்டாட தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu

தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வருகிறார்.

விக்கியுடன் காதல்

விக்கியுடன் காதல்

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோயினாக நடித்தார் நயன்தாரா அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

லிவிங் டுகெதர்

லிவிங் டுகெதர்

தொடர்ந்து இருவரும் லிவிங் டுகெதரில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக அவ்வப்போது தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத விக்கியும் நயன்தாராவும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்.

ஓணம் பண்டிகைக்காக..

ஓணம் பண்டிகைக்காக..

அந்த போட்டோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை திணறடித்து வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுள்ளார்.

தனி விமானம் மூலம்

தனி விமானம் மூலம்

இருவரும் தனி விமானம் மூலம் கொச்சின் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதுகில் பேக்

முதுகில் பேக்

அதிர் கறுப்பு நிற பேண்ட் ஷர்ட் அணிந்துள்ளார் நயன்தாரா. மஞ்சள் நிற ஹீல்ஸ், கூலிங் கிளாஸ் என கையில் மொபைலுடன் செல்கிறார். நடிகர் விக்னேஷ் சிவன் கையில் ஒரு ஜெர்க்கினையும் முதுகில் பேக்கையும் மாட்டி செல்கிறார்.

தீயாய் பரவும் போட்டோ

தீயாய் பரவும் போட்டோ

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடந்து செல்லும் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இருவரும் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X