Nayanthara: அருண்ராஜா காமராஜுடன் இணையும் நயன்தாரா.. ஹீரோயின் சப்ஜெட்டில் மீண்டும் லேடி சூப்பர்ஸ்டார்!

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்தும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களிலும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த ஜவான் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

Actress Nayanthara going to join with Arunraja Kamaraj direction and the announcement expected soon

அடுத்ததாக நயன்தாரா லீட் கேரக்டரில் நடித்துள்ள அன்னபூரணி படம் டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளது. படத்தில் நடிகர் ஜெய் நயன்தாராவிற்கு ஜோடியாகியுள்ளார்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருந்தார். அட்லீ இயக்கத்தில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியா மணி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் பாலிவுட்டில் நயன்தாராவிற்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்துள்ளது. இதன்மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளும் பாலிவுட்டில் கிடைத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அன்னபூரணி படம்: இந்நிலையில் அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி என்ற படம் தமிழில் ரிலீசாகவுள்ளது. டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தில் ரேணுகா, சச்சு, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் இவர்களின் கேரக்டர்களை படக்குழு தற்போது அறிமுகம் செய்துள்ளது. நயன்தாராவின் ஜோடியாக நடிகர் ஜெய் நடித்துள்ளார். படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அடுத்தடுத்த பிசினஸ்: தமன் இசையில் இந்தப் படத்தின் பாடல் தற்போது லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது- சமையலை மையமாக கொண்டு வித்தியாசமான கான்செப்டில் இந்த படம் உருவாகியுள்ளதாக டீசரில் தெரியவருகிறது. அடுத்தடுத்த பல பிசினசையும் நடத்தி வருகிறார் நயன்தாரா. தன்னுடைய கணவருடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி சில படங்களையும் தயாரித்து வருகிறார்.

அருண்ராஜா காமராஜுடன் நயன்தாரா கூட்டணி: அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் நயன்தாரா, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அடுத்தப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப்படத்தின் கதைக்களம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இதே தயாரிப்பு நிறுவனத்திற்காக கார்த்தியை வைத்து அருண்ராஜா காமராஜ் படமியக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கார்த்தி அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது அதே நிறுவனத்திற்காக அருண்ராஜா காமராஜ் நயன்தாராவை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் அறிவிப்பு: முன்னதாக கனா, நெஞ்சுக்கு நீதி, லேபிள் வெப் தொடர் போன்றவற்றை இயக்கியுள்ள அருண்ராஜா காமராஜ், நயன்தாராவிடம் ஒரு கதையை கூறியதாகவும் அந்தக் கதை பிடித்துப் போக அதில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து விஜய், ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் நயன்தாரா, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X