Nayanthara : வாவ் என்ன அழகு.. முதல் முறையாக குழந்தைகள் முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய நயன்தாரா!
சென்னை : நடிகை நயன்தாரா தனது குழந்தைகளின் முகத்தை முதன்முறையாக வெளியுலகத்திற்கு காட்டி உள்ளார்.
நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனை காதலிக்கத் தொடங்கினார் நயன்தாரா. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக காதல் ஜோடியாக வலம் வந்த இவர்களுக்கு எப்போது திருமணம் என அனைவரும் கேட்டு வந்தனர்.
அதையடுத்து, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திரையுலகமே ஆச்சரியப்படும் அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இரட்டை ஆண் குழந்தை
ஜூன் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், அக்டோபர் 9ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளின் கால்களை முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு, நானும் நயனும் தந்தை, தாய் ஆகிவிட்டோம். கடவுளின் ஆசிர்வாதத்தால் எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. எங்களது உயிர், உலகம் எனத் தெரிவித்திருந்தார்.

சர்ச்சைக்கு விளக்கம்
இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பலர் திருமணமான நான்கு மாதத்தில் குழந்தையா என பல நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து சோஷியல் மீடியாவை கலங்கடித்தது. இதையடுத்த இருவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறி ஆதாரத்தை சமர்ப்பித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

உயிர்,உலகம்
இதையடுத்து,நயன்தாரா தனது குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயர் வைத்து அழைத்து வந்த நிலையில், சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்து இருக்கிறார். அதாவது உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் அறிவித்திருந்தார்.

வாவ் என்ன அழகு
இந்த செய்தி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தனது மகன்களின் பெயரை முறைப்படி அறிவித்துள்ளார். மேலும், இத்தனை நாட்கள் வெளியுலகத்திற்கு தனது குழந்தைகளின் முகத்தை காட்டாதவர் தற்போது வெளியுலகத்திற்கு தனது குழந்தைகளின் முகத்தை காட்டி உள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் செம க்யூட் என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











