நயன்தாரா அடுத்த படத்தின் பெயர் என்ன தெரியுமா ? இணையத்தில் வெளியான தகவல் !
சென்னை : அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.
Recommended Video
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.
நயன்தாரா 'பாட்டு' என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஒடிடியில் வெளியானது
தமிழில் பிஸியாக இருந்தாலும் மலையாளத்தில் அவ்வவப்போது படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'நிழல்' என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் 7வயது சிறுவனின் தாயாக நடித்திருந்தார். ஒடிடியில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

11 பாடல்கள்
நிழல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'பாட்டு' என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை இயக்குனர் அல்போன்ஸ் இயக்குகிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கதாநாயகராக நடிக்கிறார். பாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பார்வையற்ற பெண்ணாக
காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த்ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இதில், கண் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து இருக்கிறார். இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் அடுத்தமாதம் வெளியாகவிருக்கிறது இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அட்லி பேச்சுவார்த்தை
இயக்குர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்க இருக்கிறார். இதில் , நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் அட்லி. அட்லியின் முதல் திரைப்படமான ராஜா ராணி மற்றும் பிகில் படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











