மிஸ்டர் தனுஷ் வன்மத்தை கக்காதீங்க.. பழிவாங்குவது ஏன்.. சட்டரீதியாக சந்திக்கலாம்.. நயன்தாரா அதிரடி!
சென்னை: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் பிறந்த நாளன்று வெளியாக இருக்கும் நிலையில், நடிகை நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராமில் தனுஷிடம் சரமாரியான கேள்விகளை கேட்டு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், மிஸ்டர் தனுஷ் ராஜா, பல தவறான விஷயங்களைச் சரிசெய்வதற்காக உங்களுக்கு பொது வெளியில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நல்ல நடிகர், உங்கள் தந்தை மற்றும் உங்கள் சகோதரரின் ஆதரவுடனும், ஆசியுடனும், ஒரு பிரபல இயக்குனருமான நீங்கள் இதைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சினிமாவிற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் சுயமாக உழைத்து முன்னுக்கு வந்த ஒரு பெண் மற்றும் இன்று நான் வகிக்கும் பதவிக்காக பல போராட்டத்தை சந்தித்து இருக்கிறேன்.

என்னை தெரிந்தவர்கர்கள், பார்வையாளர்கள் மற்றும் எனது திரைப்பட சகோதரத்துவத்தின் நல்லெண்ணம் கொண்டவர்களுக்கு உண்மையை சொல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனது நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் வெளியீட்டுக்காக நான் மட்டுமல்ல, எனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
பழிவாங்குவது ஏன்: நீங்கள் படத்திற்கு எதிராக பழிவாங்கும், என்னை மட்டுமில்லாமல், என் கூட்டாளி மற்றும் இந்த திட்டத்திற்காக தங்கள் முயற்சியையும் நேரத்தையும் கொடுத்தவர்களையும் பாதிக்கிறது. நான், என் வாழ்க்கை, என் காதல் மற்றும் திருமணம் பற்றிய இந்த NetFlix ஆவணப்படத்தில் எனது தொழில், நலன் விரும்பிகள், பல படங்களின் நினைவுகள் உள்ளன. உங்களிடம் இருந்து NOC பெற்று ஆவணப்படத்தை வெளியிட உங்களின் ஒப்புதலுக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். நீங்கள் அனுமதிக்க மறுத்ததால், தற்போதைய பதிப்பை கைவிடவும், மீண்டும் திருத்தவும் மற்றும் தீர்வு காணவும் முடிவு செய்து அவற்றை சரிசெய்தோம்.
தனிப்பட்ட வெறுப்பு: நானும் ரவுடி தான் படத்தின் பாடல்கள் இன்று வரை பாராட்டப்படுகின்றன, ஏனென்றால் பாடல் வரிகள் உண்மையான உணர்ச்சிகளிலிருந்து வந்தவை, எங்கள் ஆவணப்படத்தில் நாங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த இசை இல்லை என்பதை அறிந்து, அந்த பாடலை பயன்படுத்த எங்களுக்கு வாய்ப்பளிக்க நீங்கள் மறுத்தீர்கள் அல்லது பாடல்களின் வரிகளை கூட பயன்படுத்த மறுத்தீர்கள். வணிக நிர்ப்பந்தங்கள் மற்றும் பணப்பிரச்சினைகளால் நீங்கள் அவ்வாறு முடிவு செய்து இருப்பீர்கள் என்பது புரியும்; ஆனால் உங்களின் இந்த முடிவு எங்கள் மீதான உங்கள் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. நீங்கள் வேண்டுமென்றே இவ்வளவு காலம் முடிவெடுக்காமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.
சட்டப்படி எதிர்கொள்வேன்: Netflix ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு உங்கள் சட்ட அறிவிப்பு இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. எங்களுடைய தனிப்பட்ட சாதனங்களில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களின் (வெறும் 3 வினாடிகள்) உபயோகம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்பிய அந்த வரிகளை படித்து திடுக்கிட்டேன். உங்கள் சட்டப்பூர்வ அறிவிப்பை நான் பெற்றுள்ளேன், அதற்கு நாங்கள் சட்டப்பூர்வமான வழிகளில் பதிலளிப்போம். எங்களின் NetFlix ஆவணப்படத்திற்காக Naanum Rowdy Dhan இன் கூறுகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் NOC வழங்க மறுத்ததை பதிப்புரிமைக் கோணத்தில் நீங்கள் நீதிமன்றத்திற்கு நியாயப்படுத்தலாம், ஆனால் அதில் ஒரு தார்மீகப் பக்கமும் உள்ளது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,


Click it and Unblock the Notifications











