காதலி நடிகை சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்!

நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 4 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளத்தை வாங்கும் நயன்தாரா- வீடியோ

சென்னை: நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 4 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அறம் படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை ஸ்ட்ராங்காக அமைத்து கொண்டார் நடிகை நயன்தாரா. அவரின் படங்களும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலை குவிக்கின்றன.

இதனால் ஹீரோக்கள் இல்லாத கதைகளை அவருக்காகவே தயார் செய்கின்றனர் இயக்குனர்கள். கடந்த வருடம் வெளிவந்த அறம் படத்துக்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் எகிறியுள்ளது.

சிறப்பு காட்சிகள்

சிறப்பு காட்சிகள்

கோலமாவு கோகிலா படத்திலும் ஹீரோ இல்லாமல் நயன்தாராவை மட்டுமே முன்னிலை படுத்தி வருகின்றனர். விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு அதிகாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவதுபோல் கோலமாவு கோகிலா படத்துக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடுகிறார்கள்.

அஜித் ஜோடியாக

அஜித் ஜோடியாக

தற்போது நடித்து வரும் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் படங்களிலும் நயன்தாரா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அஜித் ஜோடியாக விஸ்வாசம் படத்தில் நடிக்கிறார்.

புதிய படத்துக்கு ஒப்பந்தம்

புதிய படத்துக்கு ஒப்பந்தம்

சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

யாரும் வாங்கியதில்லை

யாரும் வாங்கியதில்லை

இந்த நிலையில் இதுவரை ரூ.3 கோடி வாங்கி வந்த நயன்தாரா இப்போது தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகில் இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை என்ற தகவலும் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X