கல்யாணம்.. ஹனிமூன் முடிஞ்சாச்சு.. அடுத்தது தனிமூன்தான்.. ஷாருக் சூட்டிங்கிற்காக மும்பை பறந்த நயன்தாரா!

மும்பை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கடந்த 9ம் தேதி மகாபலிபுரம் ரெசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து நயன்தாராவின் அம்மா வீட்டில் சில தினங்கள் இருந்த இருவரும் தற்போது ஹனிமூனையும் முடித்து சென்னை திரும்பியுள்ளனர்.

தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாகியுள்ளனர்.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக மற்றும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது.

7 ஆண்டு காதல்

7 ஆண்டு காதல்

நானும் ரவுடிதான் படத்தின்போது மலர்ந்த இவர்களது காதல், தொடர்ந்து 7 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக இருவரும் அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

திருமண அறிவிப்பு

திருமண அறிவிப்பு

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சிறப்பான விமர்சனங்களை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் படம் வெளியான சில தினங்களில் விக்னேஷ் சிவன் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 9ம் தேதி இருவரின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சிறப்பாக நடைபெற்ற திருமணம்

சிறப்பாக நடைபெற்ற திருமணம்

நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, கௌதம் மேனன், அட்லி, கேஎஸ் ரவிக்குமார் என திரைத்துறை பிரபலங்கள் சூழ இந்தத் திருமணம் மிகவும் சிறப்பான வகையில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து திருப்பதிக்கு இந்த ஜோடி விசிட் செய்து சாமி தரிசனமும் செய்தது.

கேரளாவில் நயன்தாரா -விக்னேஷ் ஜோடி

கேரளாவில் நயன்தாரா -விக்னேஷ் ஜோடி

தொடர்ந்து நயன்தாராவின் பெற்றோர் வீட்டில் சில தினங்கள் இருவரும் இருந்தனர். இதன்போது இவர்கள் இருவரையும் ஏராளமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சந்தித்து திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகின.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில் ஹனிமூன்

இந்நிலையில் ஹனிமூன் கிடையாது என்று கூறிவந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது தாய்லாந்தில் ஹனிமூன் முடித்து தற்போது சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக உள்ளனர். நயன்தாரா தற்போது ஜவான் படத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் இணைந்துள்ளார்.

சூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்பு

சூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்பு

இதற்கென அவர் தனியாக மும்பை பறந்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் சில காட்சிகளில் நயன்தாரா நடித்திருந்த நிலையில், தற்போது திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக மீண்டும் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். நேற்றைய தினம் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

Recommended Video

R.K.Suresh speech | விஜய் சேதுபதி உருவத்தில என் அப்பாவை பாக்குறேன்..!!' | Maamanithan Press Meet
மும்பை பயணம்

மும்பை பயணம்

தாய்லாந்திலிருந்து ஹனிமூனை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய உடனே சூட்டிங்கில் பங்கேற்க மும்பைக்கு நயன்தாரா சென்றுள்ளார். சில தினங்கள் கூட இடைவெளி இல்லாமல் உடனடியாக சூட்டிங்கில் பங்கேற்க சென்ற அவரது இந்த செயல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X